Skip to main content
🌤️ —°C
புதன் | 29 ஜூலை 2026 | 13 ஆடி பராபவ வருடம்

டெல்லியில் கவர்ந்திழுக்கும் பேஷன் திருவிழா: மாடல் அழகிகளின் அசத்தலான ரேம்ப் வாக்

டெல்லியில் கவர்ந்திழுக்கும் பேஷன் திருவிழா: மாடல் அழகிகளின் அசத்தலான ரேம்ப் வாக்
புதுடெல்லியில் நடைபெற்று வரும் பிரம்மாண்ட பேஷன் திருவிழாவில் முன்னணி மாடல் அழகிகள் ரேம்பில் நேர்த்தியாக நடைபோட்டு பார்வையாளர்களை கவர்ந்தனர். பேஷன் டிசைன் கவுன்சில் ஆப் இந்தியா (FDCI) ஏற்பாடு செய்துள்ள நாட்டின் முக்கிய ஆடம்பர ஆடை வடிவமைப்பு விழாவான "ஹூண்டாய் இந்தியா குட்டூர் வீக் 2026" ஒரு வார நிகழ்வாக நடைபெற்று வருகிறது.இந்த விழாவின் தொடக்க நிகழ்ச்சி கடந்த 23-ஆம் தேதி ஐதராபாத்தில் நடைபெற்றது. முதல் நாள் நிகழ்வுகள் அங்கு நடைபெற்ற நிலையில், தொடர்ந்து நடைபெறும் ஆறு நாள் நிகழ்ச்சிகள் புதுடெல்லி தாஜ் பேலஸ் ஹோட்டலில் நடத்தப்பட்டு வருகின்றன.கடந்த 24-ஆம் தேதி முதல் தாஜ் பேலஸ் ஹோட்டலில் ஆடை அணிவகுப்பு மற்றும் கண்காட்சி உற்சாகமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவின் முன்னணி ஆடை வடிவமைப்பாளர்கள் உருவாக்கிய பிரத்யேக ஆடைகளை அணிந்த மாடல்கள், தங்களின் அழகிய ரேம்ப் நடை மூலம் பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றனர்.இந்த விழாவில் இந்திய பாரம்பரிய கைவினை நுணுக்கங்களையும் நவீன மேற்கத்திய வடிவமைப்புகளையும் இணைத்த ஆடைகள் காட்சிப்படுத்தப்பட்டன.
Advertisement
தருண் தஹிலியானி, ஜேஜே வளாயா, பல்குனி ஷேன் பீகாக் உள்ளிட்ட முன்னணி வடிவமைப்பாளர்களின் படைப்புகளை மாடல்கள் அணிந்து அறிமுகப்படுத்தினர்.'ஓரியண்ட் எக்ஸ்பிரஸ்' ரயில் பயணத்தையும் இந்திய பாரம்பரிய கைத்தறி மரபையும் மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட இந்த ஆடைகளில் பட்டு, வெல்வெட் மற்றும் ஜரிகை வேலைப்பாடுகள் சிறப்பாக இடம்பெற்றிருந்தன. கனமான உடைகளை அணிந்திருந்த போதிலும், மாடல்கள் மேடையில் தன்னம்பிக்கையுடனும் கம்பீரத்துடனும் நடைபோட்டனர்.பிரம்மாண்ட மேடை அமைப்பு, பழமையான கடிகாரங்கள் மற்றும் அரசவை பாணியிலான விளக்குகள் நிகழ்ச்சிக்கு தனித்துவமான தோற்றத்தை அளித்தன. இந்த ஆடை அணிவகுப்பை காண சர்வதேச பேஷன் விமர்சகர்கள், பாலிவுட் பிரபலங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் பிரபலமான பலரும் கலந்து கொண்டனர்.டெல்லியில் நடைபெற்று வரும் இந்த பேஷன் திருவிழா, உலகப் புகழ்பெற்ற ஆடை வடிவமைப்பாளர் ராகுல் மிஷ்ராவின் இறுதி ஆடை அணிவகுப்புடன் வரும் 29-ஆம் தேதி நிறைவடைய உள்ளது.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு