Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வெள்ளி | 16 அக்டோபர் 2026 | 30 புரட்டாசி பராபவ வருடம்

டி20 வரலாற்றில் புதிய மைல்கல்! ஒன்றுக்கு மேற்பட்ட முறை 5 விக்கெட்டுகள் வீழ்த்தி கீமோ பால் சாதனை

டி20 வரலாற்றில் புதிய மைல்கல்! ஒன்றுக்கு மேற்பட்ட முறை 5 விக்கெட்டுகள் வீழ்த்தி கீமோ பால் சாதனை

ஆண்களுக்கான சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இரண்டு முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர் என்ற பெருமையை கீமோ பால் பெற்றுள்ளார். இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே ஐதராபாத்தில் நடைபெற்ற 4-வது டி20 போட்டியில் கீமோ பால் 41 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதன் மூலம், சர்வதேச ஆண்கள் டி20 போட்டிகளில் இரண்டாவது முறையாக ஒரே இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அவர் புதிய சாதனை படைத்தார். இதற்கு முன்னதாக, 2018-ம் ஆண்டு வங்காளதேச அணிக்கு எதிரான டி20 போட்டியில் 15 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். அதேபோல், இந்திய அணிக்கு எதிரான சர்வதேச ஆண்கள் டி20 போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது பந்துவீச்சாளர் என்ற சிறப்பையும் கீமோ பால் பெற்றுள்ளார். இதற்கு முன்பு, 2022-ம் ஆண்டு பாசெட்டெரேவில் நடைபெற்ற ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஒபேட் மெக்காய் 17 ரன்களை மட்டுமே வழங்கி 6 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். ஷாய் ஹோப்பின் அதிரடி சதம்! ஐதராபாத்தில் நடைபெற்ற 4-வது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, ஷாய் ஹோப்பின் அதிரடி ஆட்டத்தால் 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 247 ரன்கள் குவித்தது.

Advertisement
சிறப்பாக விளையாடிய ஹோப், 50 பந்துகளில் 102 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதையடுத்து, 248 ரன்கள் என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு சஞ்சு சாம்சன் அதிரடியான தொடக்கத்தை அளித்தார். அவர் 23 பந்துகளில் 56 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து திலக் வர்மா 43 ரன்களும், நிதிஷ் குமார் ரெட்டி 41 ரன்களும் சேர்த்தனர். இருப்பினும், கீமோ பாலின் துல்லியமான பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் இந்திய அணி 19.3 ஓவர்களில் 223 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்தது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடரைத் தீர்மானிக்கும் கடைசிப் போட்டி! இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி 2-2 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசிப் போட்டி நாளை பெங்களூருவில் நடைபெறுகிறது. தொடரைக் கைப்பற்ற இரு அணிகளுக்கும் வெற்றி அவசியம் என்பதால், கடைசிப் போட்டி மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,515
🥈 Silver ₹240.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு