Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
திங்கள் | 21 செப்டம்பர் 2026 | 5 புரட்டாசி பராபவ வருடம்

டாஸ்மாக் கடைகளில் விருப்பத்துக்கு ஏற்ப மதுபானங்கள்: புதிய நடைமுறை இன்று முதல் அமல்

டாஸ்மாக் கடைகளில் விருப்பத்துக்கு ஏற்ப மதுபானங்கள்: புதிய நடைமுறை இன்று முதல் அமல்

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளில், வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப மதுபான வகைகளை கொள்முதல் செய்து வழங்கும் புதிய நடைமுறை இன்று (திங்கட்கிழமை) முதல் அமலுக்கு வந்துள்ளது. தமிழகம் முழுவதும் சுமார் 4 ஆயிரம் டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதற்கு முன்பு பிராந்தி, விஸ்கி உள்ளிட்ட மதுபானங்கள் 11 நிறுவனங்களிடமிருந்தும், பீர் வகைகள் 7 நிறுவனங்களிடமிருந்தும் கொள்முதல் செய்யப்பட்டு வந்தன. த.வெ.க. அரசு பொறுப்பேற்ற பிறகு, அனைத்து மதுபான நிறுவனங்களிடமிருந்தும் சம அளவில் கொள்முதல் செய்து, அனைத்து வகை மதுபானங்களையும் டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன்படி, கடந்த ஜூலை 20-ந் தேதி முதல் புதிய கொள்முதல் நடைமுறை செயல்பாட்டுக்கு வந்தது. ஆனால், மதுப்பிரியர்கள் விரும்பும் குறிப்பிட்ட மதுபான வகைகள் பல டாஸ்மாக் கடைகளில் கிடைப்பதில்லை என்ற புகார்கள் எழுந்தன. இதையடுத்து, கடைகளுக்கு மதுபானங்களை அனுப்பும் கொள்முதல் முறையில் டாஸ்மாக் நிர்வாகம் தற்போது மாற்றம் செய்துள்ளது.

Advertisement
புதிய உத்தரவின்படி, இன்று முதல் ஒவ்வொரு டாஸ்மாக் கடைக்கும் தேவையான மதுபாட்டில்கள், அந்தந்த கடையின் உண்மையான விற்பனைத் தேவை மற்றும் கோரிக்கையின் அடிப்படையில் மட்டுமே வழங்கப்பட வேண்டும். இதற்கான நடவடிக்கையை அனைத்து மாவட்ட மேலாளர்களும் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 20-ந் தேதி முதல் நடைமுறையில் இருந்த, அனைத்து நிறுவனங்களிடமிருந்தும் சம அளவில் மதுபானங்களை கொள்முதல் செய்து அனைத்து கடைகளுக்கும் சமமாகப் பிரித்து வழங்கும் முறை இனி தொடராது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய உத்தரவை டாஸ்மாக் மூத்த மண்டல மேலாளர்கள், மாவட்ட மேலாளர்கள் மற்றும் கிட்டங்கி மேலாளர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம், கடைகளில் விற்பனையாகாமல் தேங்கும் மதுபானங்களின் அளவு குறைவதுடன், அதிகம் விற்பனையாகும் மதுபான வகைகள் தேவைக்கேற்ப கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,270
🥈 Silver ₹260.00
Petrol ₹107.77
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு