ஜம்மு காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் சர்வதேச எல்லையை ஒட்டிய பகுதியில் டிரோன் ஒன்று பறந்ததாக இன்று காலை எல்லை பாதுகாப்புப் படை வீரர்களுக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட பகுதியில் வீரர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, எல்லையையொட்டிய விவசாய நிலத்தில் ஒரு டிரோன் கிடப்பது கண்டறியப்பட்டது. முதற்கட்ட விசாரணையில், அது பாகிஸ்தானில் இருந்து வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. DJI Matrice 300 RTK வகையைச் சேர்ந்த அந்த டிரோன், சர்வதேச எல்லையில் இருந்து சுமார் 800 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள லால்பம்கிமா எல்லைச் சாவடி அருகே மீட்கப்பட்டது.
Advertisement
இதற்கிடையே, டிரோனில் ஆயுதங்களோ அல்லது போதைப்பொருட்களோ இணைக்கப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், அதன் பின்னணி மற்றும் பயன்பாடு குறித்து விரிவாக ஆய்வு செய்வதற்காக டிரோன் தடயவியல் அறிவியல் ஆய்வகத்திற்கு (FSL) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.