திருச்சி மாவட்டத்தில் சொத்து பிரிப்பது தொடர்பாக ஏற்பட்ட குடும்பத் தகராறில், பெற்ற தாயை உடற்பயிற்சிக்குப் பயன்படுத்தப்படும் டம்பள்ஸால் தாக்கி கொலை செய்ததாக மகனை போலீசார் கைது செய்துள்ளனர்.கல்லாத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் செல்வி (50). இவருக்கும், இவரது மகன் வெங்கடேசனுக்கும் இடையே சொத்து பிரிப்பது தொடர்பாக நீண்ட காலமாக கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.இந்த நிலையில், இன்று (சனிக்கிழமை) காலை தாய் மற்றும் மகனுக்கு இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் வாக்குவாதம் முற்றி மோதலாக மாறியதாக தெரிகிறது.அப்போது ஆத்திரமடைந்த வெங்கடேசன், வீட்டில் இருந்த கனமான உடற்பயிற்சி டம்பள்ஸை எடுத்து தாய் செல்வியின் தலையில் தாக்கியதாக கூறப்படுகிறது.
Advertisement
இதில் பலத்த காயமடைந்த செல்வி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இதுகுறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று செல்வியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.மேலும், கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்ற வெங்கடேசனை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.சொத்து தகராறில் தாயை மகனே தாக்கி கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.