Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
செவ்வாய் | 06 அக்டோபர் 2026 | 20 புரட்டாசி பராபவ வருடம்

சென்னையில் பைக் ரேஸ், விபத்துகளைத் தடுக்க 13 தனிப்படைகள் அமைப்பு!

சென்னையில் பைக் ரேஸ், விபத்துகளைத் தடுக்க 13 தனிப்படைகள் அமைப்பு!

சென்னையில் பைக் ரேஸ் மற்றும் அதிவேக வாகன ஓட்டத்தால் ஏற்படும் விபத்துகளைத் தடுக்க காவல்துறை கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளது. இதற்காக நகரின் பல்வேறு பகுதிகளில் 13 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. நள்ளிரவில் பைக் ரேஸ்: இளைஞர்கள் அட்டகாசம் சென்னையில் இரண்டு நாட்களுக்கு முன்பு கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், கோட்டூர்புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நள்ளிரவு நேரத்தில் 60-க்கும் மேற்பட்டோர் பைக் ரேஸில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அப்பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே, கோட்டூர்புரத்தில் அதிவேகமாகச் சென்ற இருசக்கர வாகனம் ஒன்று மேம்பாலத்தின் தடுப்புச்சுவரில் மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட மெக்கானிக் ஸ்ரீகுகன் உயிரிழந்தார். இச்சம்பவம் சென்னையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 16 பேர் கைது; கண்காணிப்பு தீவிரம் இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, பைக் ரேஸில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 16 பேரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement
மேலும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்கவும், ஆபத்தான வாகன ஓட்டத்தைக் கட்டுப்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி, சென்னையில் 13 தனிப்படைகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு படையிலும் ஓர் உதவி ஆய்வாளர் தலைமையில் நான்கு போலீசார் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இரவு 10 மணி முதல் அதிகாலை 2 மணி வரை ரோந்து பைக் ரேஸ் நடைபெற வாய்ப்புள்ள இடங்கள், முக்கிய சாலைகள் மற்றும் விபத்துகள் அதிகம் ஏற்படக்கூடிய பகுதிகளில் இந்தத் தனிப்படையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். குறிப்பாக, தினமும் இரவு 10 மணி முதல் அதிகாலை 2 மணி வரை ரோந்துப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. பைக் ரேஸில் ஈடுபடுவோர் மற்றும் ஆபத்தான முறையில் வாகனங்களை ஓட்டுவோரைக் கண்காணித்து, போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,675
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு