Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வெள்ளி | 16 அக்டோபர் 2026 | 30 புரட்டாசி பராபவ வருடம்

சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்கிறீர்களா? சிறப்புப் பேருந்துகள் புறப்படும் இடங்கள் விவரம்

சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்கிறீர்களா? சிறப்புப் பேருந்துகள் புறப்படும் இடங்கள் விவரம்

ஆயுத பூஜை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு, சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக 5 இடங்களில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. பயணிகள் தங்களது ஊர்களுக்குச் செல்ல எந்தப் பேருந்து நிலையத்தை அணுக வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ளும் வகையில், வழித்தடங்கள் மற்றும் பேருந்துகள் புறப்படும் இடங்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. பல்வேறு ஊர்களுக்குச் செல்லும் பேருந்துகளின் வழித்தட விவரங்கள்: 1. திண்டிவனம் வழித்தடம் விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, விருத்தாசலம், திட்டக்குடி, திருக்கோவிலூர், கள்ளக்குறிச்சி, சேலம், கோயம்புத்தூர் ஆகிய ஊர்களுக்குச் செல்லும் பேருந்துகள் இந்த வழித்தடத்தில் இயக்கப்படும். மேலும், திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் ஆகிய பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகளும், புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகளும் இயக்கப்படும். இதுதவிர, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், தூத்துக்குடி, திருச்செந்தூர், செங்கோட்டை, திண்டுக்கல், பழனி, பொள்ளாச்சி ஆகிய ஊர்களுக்குச் செல்லும் பேருந்துகளும் இந்த வழித்தடத்தில் இயக்கப்படும்.

Advertisement
2. செஞ்சி வழித்தடம் திருவண்ணாமலை, போளூர், சேத்துப்பட்டு, வந்தவாசி ஆகிய ஊர்களுக்குச் செல்லும் பேருந்துகள் செஞ்சி வழியாக இயக்கப்படும். 3. கும்பகோணம், நாகப்பட்டினம், தஞ்சாவூர் வழித்தடம் கும்பகோணம், நாகப்பட்டினம், தஞ்சாவூர் ஆகிய ஊர்களுக்குச் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும். மேலும், கிளாம்பாக்கம் எம்.டி.சி. பேருந்து நிலையத்தில் இருந்து மறைமலை நகர் தற்காலிகப் பேருந்து நிலையம் வரை பயணிகள் செல்ல வசதியாகக் கட்டணமில்லா இணைப்புப் பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. 4. கிழக்குக் கடற்கரைச் சாலை (ECR) வழித்தடம் கிழக்குக் கடற்கரைச் சாலை வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி ஆகிய ஊர்களுக்குச் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும். 5. பிற முக்கிய வழித்தடங்கள் காஞ்சிபுரம், வேலூர், ஓசூர், பெங்களூரு, திருத்தணி, திருப்பதி ஆகிய ஊர்களுக்குச் செல்லும் பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.எனவே, ஆயுத பூஜை மற்றும் தொடர் விடுமுறையின்போது சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்யத் திட்டமிட்டுள்ளவர்கள், தங்களது ஊருக்குச் செல்லும் பேருந்து புறப்படும் இடத்தை அறிந்துகொண்டு பயணத்தைத் திட்டமிடலாம்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,515
🥈 Silver ₹240.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு