Skip to main content
தினத்துளிர்
🌤️ —°C
புதன் | 02 செப்டம்பர் 2026 | 17 ஆவணி பராபவ வருடம்

செங்கல்பட்டு அருகே பரபரப்பு: பெருங்கருணை கிராமத்தில் மரகத முருகர் சிலை திருட்டு

செங்கல்பட்டு அருகே பரபரப்பு: பெருங்கருணை கிராமத்தில் மரகத முருகர் சிலை திருட்டு

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள பெருங்கருணை கிராமத்தில் மலை மீது பால தண்டாயுதபாணி கோவில் அமைந்துள்ளது. சென்னை வடபழனி முருகன் கோவிலுக்கும், பழனி முருகன் கோவிலுக்கும் இடையே அமைந்திருப்பதால், இந்த கோவிலை முருக பக்தர்கள் ‘நடுபழனி முருகன் கோவில்’ என்றும் அழைக்கின்றனர்.இந்த கோவிலின் கருவறையில் சுமார் 2 அடி உயரம் கொண்ட மரகதத்தால் செய்யப்பட்ட முருகர் சிலை மூலவராக இருந்தது. இந்நிலையில், நேற்று இரவு கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள், பூட்டை உடைத்து கருவறையில் இருந்த மரகத முருகர் சிலையை திருடிச் சென்றுள்ளனர்.சிலை திருடப்பட்டதைத் தொடர்ந்து கோவில் நிர்வாகம் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

Advertisement
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.திருடப்பட்டுள்ள மரகத முருகர் சிலையின் மதிப்பு பல லட்சம் ரூபாய் முதல் கோடிக்கணக்கான ரூபாய் வரை இருக்கலாம் என கூறப்படுகிறது. கோவிலில் இருந்து மரகதத்தால் செய்யப்பட்ட முருகர் சிலை திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு