செங்கல்பட்டு அருகே பரபரப்பு: பெருங்கருணை கிராமத்தில் மரகத முருகர் சிலை திருட்டு
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
02 Sep 2026, புதன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 02 Sep 2026, Wednesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

செங்கல்பட்டு அருகே பரபரப்பு: பெருங்கருணை கிராமத்தில் மரகத முருகர் சிலை திருட்டு

செங்கல்பட்டு அருகே பரபரப்பு: பெருங்கருணை கிராமத்தில் மரகத முருகர் சிலை திருட்டு

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள பெருங்கருணை கிராமத்தில் மலை மீது பால தண்டாயுதபாணி கோவில் அமைந்துள்ளது. சென்னை வடபழனி முருகன் கோவிலுக்கும், பழனி முருகன் கோவிலுக்கும் இடையே அமைந்திருப்பதால், இந்த கோவிலை முருக பக்தர்கள் ‘நடுபழனி முருகன் கோவில்’ என்றும் அழைக்கின்றனர்.இந்த கோவிலின் கருவறையில் சுமார் 2 அடி உயரம் கொண்ட மரகதத்தால் செய்யப்பட்ட முருகர் சிலை மூலவராக இருந்தது. இந்நிலையில், நேற்று இரவு கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள், பூட்டை உடைத்து கருவறையில் இருந்த மரகத முருகர் சிலையை திருடிச் சென்றுள்ளனர்.சிலை திருடப்பட்டதைத் தொடர்ந்து கோவில் நிர்வாகம் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.திருடப்பட்டுள்ள மரகத முருகர் சிலையின் மதிப்பு பல லட்சம் ரூபாய் முதல் கோடிக்கணக்கான ரூபாய் வரை இருக்கலாம் என கூறப்படுகிறது. கோவிலில் இருந்து மரகதத்தால் செய்யப்பட்ட முருகர் சிலை திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.