Skip to main content
🌤️ —°C
வெள்ளி | 14 ஆகஸ்ட் 2026 | 29 ஆடி பராபவ வருடம்

சீதா கதாபாத்திரத்தை நான் நிராகரிக்கவில்லை; உண்மையை விளக்கிய ஸ்ரீநிதி ஷெட்டி

சீதா கதாபாத்திரத்தை நான் நிராகரிக்கவில்லை; உண்மையை விளக்கிய ஸ்ரீநிதி ஷெட்டி
'ராமாயணம்' திரைப்படத்தில் சீதை வேடத்தில் நடிக்கும் வாய்ப்பை நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி மறுத்ததால் அந்த கதாபாத்திரம் சாய் பல்லவிக்கு கிடைத்ததாக சமூக வலைதளங்களில் பரவிய தகவல்களுக்கு அவர் தற்போது விளக்கம் அளித்துள்ளார்.சமீபத்தில் அளித்த பேட்டியில் இதுகுறித்து பேசிய ஸ்ரீநிதி ஷெட்டி, அந்த தகவல்கள் முற்றிலும் தவறானவை என்று தெரிவித்துள்ளார். சீதை கதாபாத்திரத்திற்காக தன்னை முதலில் தேர்வு செய்து, பின்னர் தான் மறுத்ததாக கூறப்படுவது உண்மையல்ல என்றும், அந்த வேடத்திற்கான ஆடிஷனில் மட்டும் பங்கேற்றதாகவும், இறுதியில் தேர்வாகவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
Advertisement
இதன் மூலம் நீண்ட நாட்களாக பரவி வந்த வதந்திகளுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.ஸ்ரீநிதி ஷெட்டி, 'கேஜிஎப்' திரைப்படங்கள் மூலம் நாடு முழுவதும் கவனம் பெற்றார். அதன் பிறகு தமிழில் நடிகர் விக்ரமுடன் 'கோப்ரா' படத்தில் நடித்தார். தொடர்ந்து, கடந்த ஆண்டு நானி நடித்த 'ஹிட்: தி தேர்ட் கேஸ்' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். தற்போது 'ஆதர்ஷ குடும்ப ஹவுஸ்' என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு