சிக்கிமில் நிலச்சரிவு: 27 பேரை மீட்க தீவிர நடவடிக்கை
காங்டாக்:சிக்கிம் மாநிலத்தின் நம்சி மாவட்டத்தில் கட்டுமானத்தில் உள்ள சுரங்கப்பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவால் 27 பேர் உள்ளே சிக்கிக் கொண்டனர். அவர்களை பாதுகாப்பாக மீட்க அதிகாரிகள் மற்றும் மீட்புக் குழுவினர் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று கொண்டிருந்தபோதே இந்த நிலச்சரிவு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் தாக்கத்தால் சுரங்கத்தின் நுழைவுப் பகுதி முழுமையாக இடிந்து மூடப்பட்டதால், உள்ளே சிக்கியவர்களை உடனடியாக அடைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், சுரங்கத்தின் உள்ளே வாயு கசிவு ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதன் காரணமாக மீட்புப் பணிகள் சவாலான சூழலில் நடைபெற்று வருகின்றன. இந்த நிலைமை காரணமாக சிக்கியவர்களின் குடும்பத்தினரும் உறவினர்களும் கடும் அச்சத்தில் உள்ளனர்.