Skip to main content
தினத்துளிர்
🌤️ —°C
வெள்ளி | 11 செப்டம்பர் 2026 | 26 ஆவணி பராபவ வருடம்

சாலமன் பாப்பையா மறைவு: ரஜினிகாந்த் புகழஞ்சலி

சாலமன் பாப்பையா மறைவு: ரஜினிகாந்த் புகழஞ்சலி

பட்டிமன்ற நடுவரும் தமிழறிஞருமான சாலமன் பாப்பையா தனது 90-வது வயதில் காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மதுரையைச் சேர்ந்த சாலமன் பாப்பையா, பட்டிமன்ற நிகழ்ச்சிகள் வாயிலாக தமிழக மக்களிடையே தனக்கென ஒரு இடத்தைப் பெற்றவர். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராகப் பணியாற்றிய அவர், தமிழ் இலக்கியங்கள் குறித்த உரைகளாலும் பரவலாக அறியப்பட்டார். திருக்குறள் உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியங்களுக்கு உரையும் எழுதியுள்ளார். தமிழ் மொழி மற்றும் இலக்கியத்துக்கு அவர் ஆற்றிய பங்களிப்பை பாராட்டி, தமிழக அரசு சார்பில் கடந்த 2000-ம் ஆண்டு கலைமாமணி விருது வழங்கப்பட்டது. தொடர்ந்து, மத்திய அரசு சார்பில் 2021-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டது.

Advertisement
'பாய்ஸ்', 'சிவாஜி' உள்ளிட்ட திரைப்படங்களிலும் சாலமன் பாப்பையா நடித்துள்ளார். ஏற்கனவே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த சாலமன் பாப்பையா, வயது மூப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார். இதனிடையே, சாலமன் பாப்பையாவின் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் புகழஞ்சலி செலுத்தியுள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் வலைதளப் பதிவில், படித்தவர்களிடையே இலக்கியத் தரத்துடன் இருந்த பட்டிமன்றத்தை பாமர மக்களிடமும் பிரபலப்படுத்திய மாபெரும் தமிழ் ஆளுமை பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு