Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 14 நவம்பர் 2026 | 28 ஐப்பசி பராபவ வருடம்

சென்னையில் 200 டன் பட்டாசுக் கழிவுகள் அகற்றம்! மேலும் 450 டன் அகற்ற இலக்கு

சென்னையில் 200 டன் பட்டாசுக் கழிவுகள் அகற்றம்! மேலும் 450 டன் அகற்ற இலக்கு

தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் குவிந்த பட்டாசுக் கழிவுகளில் இதுவரை 200 மெட்ரிக் டன் அகற்றப்பட்டுள்ளது. மேலும், 450 மெட்ரிக் டன் கழிவுகளை அகற்ற சென்னை மாநகராட்சி இலக்கு நிர்ணயித்து பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தீபாவளியின்போது உருவாகும் பட்டாசுக் கழிவுகளைப் பொதுமக்கள் தனியாகப் பிரித்து, மாநகராட்சி வழங்கிய சேகரிப்புப் பைகளில் போட்டு தூய்மைப் பணியாளர்களிடம் ஒப்படைக்குமாறு ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால், இந்த நடைமுறைக்கு பொதுமக்களிடமிருந்து போதிய ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. இதுவரை சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் சுமார் 200 மெட்ரிக் டன் பட்டாசுக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள கழிவுகளில் மேலும் 450 மெட்ரிக் டன் அளவை அகற்றும் வகையில் மாநகராட்சி இலக்கு நிர்ணயித்துச் செயல்பட்டு வருகிறது. இதற்கிடையே, மழை பெய்ததால் பட்டாசுக் கழிவுகள் சாலைகளில் ஒட்டிக்கொண்டுள்ளன. இதனால் அவற்றை அகற்றுவதில் சவால்கள் ஏற்பட்டுள்ளன. இருப்பினும், தூய்மைப் பணியாளர்கள் தொடர்ந்து ஈடுபடுத்தப்பட்டு, சாலைகளில் தேங்கியுள்ள கழிவுகளை அகற்றும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

Advertisement
இந்தப் பணிகளை விரைவுபடுத்தும் நோக்கில் கூடுதலாக 600 தூய்மைப் பணியாளர்களும், 350 வாகனங்களும் மாநகரின் பல்வேறு பகுதிகளில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மேலும், பட்டாசுக் கழிவுகளைத் தனியாகச் சேகரிப்பதற்காக 50 கிலோ கொள்ளளவு கொண்ட 30,000 பைகள் தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. சேகரிக்கப்படும் பட்டாசுக் கழிவுகள் பாதுகாப்பான முறையில் அறிவியல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திச் சுத்திகரித்து அகற்றுவதற்காக, கும்மிடிப்பூண்டியில் அமைந்துள்ள பிரத்யேக செயலாக்க மையத்துக்குக் கொண்டு செல்லப்பட உள்ளன. எனவே, பொதுமக்கள் பட்டாசுக் கழிவுகளை மற்ற குப்பைகளுடன் சேர்க்காமல் தனியாகப் பிரித்து, தங்கள் பகுதிகளுக்கு வரும் மாநகராட்சித் தூய்மைப் பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும். அவற்றை வீடுகளில் உருவாகும் வழக்கமான குப்பைகளுடன் கலப்பதோ, சாலைகள் மற்றும் பொது இடங்களில் வீசுவதோ கூடாது. தூய்மையான, பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான சென்னையை உருவாக்க பொதுமக்களின் முழுமையான ஒத்துழைப்பு அவசியம் என்றும் மாநகராட்சி தனது அறிக்கையில் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,140
🥈 Silver ₹205.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு