Skip to main content
தினத்துளிர்
🌤️ —°C
புதன் | 02 செப்டம்பர் 2026 | 17 ஆவணி பராபவ வருடம்

சென்னை மாநகராட்சி பணியாளர்களுக்கு மனநல மேம்பாட்டு மையம் திறப்பு

சென்னை மாநகராட்சி பணியாளர்களுக்கு மனநல மேம்பாட்டு மையம் திறப்பு

சென்னை மாநகராட்சி பணியாளர்களின் மன மற்றும் உணர்வுநலனை மேம்படுத்தும் நோக்கில், ரிப்பன் கட்டட வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ‘மைண்ட் மந்திரா’ மனநல நல மையத்தை மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ். சமீரன் திறந்து வைத்தார்.சென்னை மாநகராட்சி, கிரடாய் சென்னை அறக்கட்டளை மற்றும் த்ருதி அறக்கட்டளை ஆகியவை இணைந்து இந்த மனநல முன்னெடுப்பை செயல்படுத்துகின்றன. மாநகராட்சியில் பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் மனநலம் மற்றும் உணர்ச்சி சார்ந்த நல்வாழ்வை மேம்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும்.ரிப்பன் கட்டட வளாகத்தில் உள்ள வருவாய்த்துறை கட்டடத்தில் இந்த நல மையம் அமைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி பணியாளர்கள் திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ‘மைண்ட் மந்திரா’வின் +91 80314 51918 என்ற உதவி எண்ணை தொடர்புகொண்டு அல்லது நேரில் சென்று பதிவு செய்யலாம். இதையடுத்து செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் உளவியலாளர்கள் மற்றும் ஆலோசகர்களிடம் நேரடியாக மனநல ஆலோசனைகளைப் பெற முடியும். மாநகராட்சி பணியாளர்களிடையே மனநலம் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பது, மன அழுத்தத்தை அடையாளம் கண்டு அதனை சமாளிக்க உதவுவது, உணர்வுப்பூர்வமான மன உறுதியை வளர்ப்பது மற்றும் தேவையான நேரத்தில் தொழில்முறை ஆலோசனைகளைப் பெறுவதை ஊக்குவிப்பது ஆகிய நோக்கங்களுடன் இந்தத் திட்டம் கடந்த 10.08.2026 அன்று தொடங்கப்பட்டது.

Advertisement
அதன் தொடர்ச்சியாக தற்போது ‘மைண்ட் மந்திரா’ நல மையம் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தின் மூலம் மாநகராட்சி பணியாளர்கள் தொழில்முறை ஆலோசனை மற்றும் உளவியல் ஆதரவைப் பெறுவதுடன், தங்களின் கவலைகளைப் பகிர்ந்து பேசவும், மன அழுத்தத்தை எதிர்கொள்ளவும், மீள்திறனை மேம்படுத்துவதற்கான நடைமுறை வழிமுறைகளை கற்றுக்கொள்ளவும் வாய்ப்பு கிடைக்கும்.மையம் திறப்பு நிகழ்ச்சியில் இணை ஆணையாளர் (கல்வி) க. கற்பகம், உதவி ஆணையாளர் (பொது நிர்வாகம்) உமா மகேஷ்வரி, த்ருதி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலரும் இணை நிறுவனருமான சுரேஷ் அருணாசலம், மாநகர நல அலுவலர் எம். ஜெகதீசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு