Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
ஞாயிறு | 20 செப்டம்பர் 2026 | 4 புரட்டாசி பராபவ வருடம்

சென்னை முதல் செங்கோட்டை வரை... 23-வது ஆண்டில் தடம் பதிக்கும் பொதிகை எக்ஸ்பிரஸ்!

சென்னை முதல் செங்கோட்டை வரை... 23-வது ஆண்டில் தடம் பதிக்கும் பொதிகை எக்ஸ்பிரஸ்!

சென்னை எழும்பூர் முதல் செங்கோட்டை வரை இயக்கப்படும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை 22 ஆண்டுகளை நிறைவு செய்து, இன்று 23-வது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளது. கடந்த 2004-ம் ஆண்டு செப்டம்பர் 20-ந் தேதி பொதிகை எக்ஸ்பிரஸ் தனது முதல் பயணத்தை தொடங்கியது. அன்றுமுதல் தென் மாவட்டங்களைச் சேர்ந்த பயணிகளுக்கு முக்கியமான ரெயில் சேவையாக இது தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. சென்னை எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், பாம்புகோவில் சந்தை, கடையநல்லூர், தென்காசி உள்ளிட்ட முக்கிய ரெயில் நிலையங்களில் பொதிகை எக்ஸ்பிரஸ் நின்று செல்கிறது.

Advertisement
சேவை தொடங்கியபோது டீசல் என்ஜின் மூலம் இயக்கப்பட்ட இந்த ரெயில், ரெயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்ட பின்னர் மாற்றம் கண்டது. கடந்த 2023-ம் ஆண்டு நவம்பர் 1-ந் தேதி முதல் பொதிகை எக்ஸ்பிரஸ் முழுமையாக மின்சார என்ஜின் மூலம் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது 12661 மற்றும் 12662 என்ற ரெயில் எண்களில் சென்னை–செங்கோட்டை இடையே பொதிகை எக்ஸ்பிரஸ் தொடர்ந்து இயக்கப்படுகிறது. 22 ஆண்டுகால பயணத்தை நிறைவு செய்து 23-வது ஆண்டில் பொதிகை எக்ஸ்பிரஸ் அடியெடுத்து வைத்துள்ள நிலையில், ரெயில் பயணிகள் மற்றும் பொதிகை எக்ஸ்பிரஸ் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,285
🥈 Silver ₹260.00
Petrol ₹107.77
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு