Skip to main content
தினத்துளிர்
🌤️ —°C
செவ்வாய் | 08 செப்டம்பர் 2026 | 23 ஆவணி பராபவ வருடம்

சட்டசபையில் அனல் பறக்க பேசிய முதல்-அமைச்சர் விஜய்.. தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் பெருமிதம்

சட்டசபையில் அனல் பறக்க பேசிய முதல்-அமைச்சர் விஜய்.. தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் பெருமிதம்

தமிழக சட்டசபையில் முதல்-அமைச்சர் விஜய் ஆவேசமாக உரையாற்றிய நிலையில், அவரது தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ. சந்திரசேகர் தனது மகனைப் பாராட்டி பெருமிதத்துடன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.தமிழக சட்டசபையில் காவல்துறை மற்றும் தீயணைப்பு மீட்புத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு முதல்-அமைச்சர் விஜய் பதிலளித்தார்.சட்டம்-ஒழுங்கு தொடர்பாக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு விஜய் தனது வழக்கமான பாணியில் ஆவேசமாகவும், நகைச்சுவையாகவும் பதிலளித்தார். அவரது பேச்சு தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி, நேற்று வைரலானது. இதனைத் தொடர்ந்து தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் விஜய்யின் உரையில் இடம்பெற்ற பகுதிகளை சிறு வீடியோக்களாக வெளியிட்டு சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.தனது உரையில் திமுகவை கடுமையாக விமர்சித்த விஜய், திமுக இருக்கும் இடங்களில்தான் தவறுகள் நடைபெறுவதாகவும், தவறு நடக்கும் இடங்களில் திமுக இருப்பதாகவும் குற்றம்சாட்டினார்.

Advertisement
மேலும், தவெக ஆளும் கட்சியாக இருந்தாலும் அல்லது எதிர்க்கட்சியாக இருந்தாலும், தவறு தொடர்பான விவகாரங்களில் உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.ஆளுங்கட்சியினருடன் தொடர்புடைய வழக்குகளில் தாமதம் ஏற்பட்டதாகவும், திமுக நிர்வாகிகள் பாதுகாக்கப்பட்டதாகவும் கூறி பல்வேறு சம்பவங்களை விஜய் சுட்டிக்காட்டினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையில் அமளியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.இந்த நிலையில், விஜய்யின் சட்டசபை உரை குறித்து அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் இன்ஸ்டாகிராமில் தனது பெருமிதத்தை வெளிப்படுத்தியுள்ளார். விஜய்யை நேரில் சந்தித்த பழைய புகைப்படத்தையும் பகிர்ந்துள்ள அவர், எவ்வளவு அழுத்தமான சூழல் இருந்தாலும் அதை எளிதாக எதிர்கொள்ளும் தனது மகனை முதல்-அமைச்சராக சந்தித்த தருணம், ஒரு தந்தையாக தனக்கு பெருமை அளித்ததாக பதிவிட்டுள்ளார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு