Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
ஞாயிறு | 13 செப்டம்பர் 2026 | 28 ஆவணி பராபவ வருடம்

கோவில் திருவிழாவில் மனைவிக்கு மரியாதை செலுத்திய கணவர்கள்: 200 தம்பதிகள் பங்கேற்பு

கோவில் திருவிழாவில் மனைவிக்கு மரியாதை செலுத்திய கணவர்கள்: 200 தம்பதிகள் பங்கேற்பு

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள மருதம்புத்தூர் ஸ்ரீமன் ராமசாமி மற்றும் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, பெண்களின் சிறப்பை போற்றும் வகையில் மனைவி நல வேட்பு விழா நடைபெற்றது. ஆலங்குளம் மனவளக்கலை மன்றம் சார்பில் மனைவிக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற கணவர்கள், தங்கள் மனைவிகளுக்கு ரோஜா மலர்களை வழங்கி, தலையில் சூட்டி அன்பை வெளிப்படுத்தினர். தொடர்ந்து தம்பதிகள் ஒருவருக்கொருவர் மாலை மாற்றிக் கொண்டதுடன், கையில் மஞ்சள் கயிறும் கட்டிக்கொண்டனர்.

Advertisement
வாழ்க்கையின் இன்பம், துன்பம் என அனைத்து சூழல்களிலும் தங்களுக்கு உறுதுணையாக இருக்கும் மனைவிகளின் கரங்களை பற்றிக்கொண்டு, கணவர்கள் தங்களது நன்றியை தெரிவித்தனர். இதேபோல், மனைவிகளும் தங்கள் கணவர்களுக்கு வாழைப்பழம் வழங்கி அன்பை வெளிப்படுத்தினர். மேலும், இல்லற வாழ்வில் தொடர்ந்து மகிழ்ச்சியும் அமைதியும் நிலவுவதற்கான வழிமுறைகள் குறித்து சிறப்பு சொற்பொழிவும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மருதம்புத்தூர் பகுதியைச் சேர்ந்த 200 தம்பதிகள் கலந்து கொண்டனர்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு