Skip to main content
🌤️ —°C
வெள்ளி | 14 ஆகஸ்ட் 2026 | 29 ஆடி பராபவ வருடம்

குமரியில் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்: கடைகளின் பூட்டை உடைத்து மது விற்பனை

குமரியில் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்: கடைகளின் பூட்டை உடைத்து மது விற்பனை
கன்னியாகுமரி மாவட்டத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் 2-வது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், சில மதுக்கடைகளின் பூட்டுகளை அதிகாரிகள் உடைத்து மது விற்பனையை தொடங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட கூடுதலாக ரூ.10 வசூலிப்பதை தடுக்கும் வகையில், புதிதாக பொறுப்பேற்றுள்ள த.வெ.க. அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே, மதுவிற்பனை தொடர்பாக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளால் தங்களுக்கு பண இழப்பு ஏற்படுவதாக டாஸ்மாக் ஊழியர்கள் குற்றம்சாட்டினர்.இதனைத் தொடர்ந்து, பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து குமரி மாவட்ட டாஸ்மாக் பணியாளர்கள் மதுக்கடைகளை மூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். முதல் நாளில் டாஸ்மாக் மண்டல மேலாளர் சுகிதா மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு இடையே 3 கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. ஆனால், இதில் எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை.இதையடுத்து, கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காததால் ஊழியர்கள் 2-வது நாளாகவும் கடைகளை மூடி போராட்டத்தை தொடர்ந்தனர். அவர்களுடன் டாஸ்மாக் மண்டல மேலாளர் கோட்டை குமார் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், மதுபாட்டில்களில் ஒட்ட வேண்டிய ஸ்டிக்கர்கள் வழங்கப்பட்டால் மட்டுமே கடைகளை திறப்போம் என்றும், கடைகளின் சாவிகளை நிர்வாகத்திடம் ஒப்படைக்க மாட்டோம் என்றும் ஊழியர்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.இந்த சூழலில், அதிகாரிகள் அடுத்தகட்ட நடவடிக்கையில் இறங்கினர்.
Advertisement
சில பகுதிகளில் அதிகாரிகள் தலைமையில் டாஸ்மாக் கடைகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டு மது விற்பனை தொடங்கப்பட்டது.ஆரல்வாய்மொழி குமாரபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையின் பூட்டு, தோவாளை தாசில்தார் சிவகலா தலைமையில் உடைக்கப்பட்டது. இதேபோல், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஒவ்வொரு மதுக்கடையாக திறக்கப்பட்டு மது விற்பனை நடைபெற்றது. இந்த தகவல் மாலை நேரத்துக்கு பிறகு மதுப்பிரியர்களுக்கு தெரியவந்த நிலையில், மதுபானங்களை வாங்குவதற்காக அவர்கள் கடைகளுக்கு திரண்டனர். இதனால் சில மதுக்கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.இதற்கிடையே, தொழிற்சங்கங்களின் கூட்டு குழுவினர் அதிகாரிகளுடன் நடத்திய இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. டாஸ்மாக் நிர்வாகம் சார்பில், ஊழியர்களின் கோரிக்கைகள் ஒரு மாதத்திற்குள் நிறைவேற்றப்படும் என தெரிவிக்கப்பட்டது.இதனை ஏற்றுக்கொண்ட பெரும்பாலான டாஸ்மாக் பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து புறப்பட்டனர். டாஸ்மாக் ஊழியர்களின் போராட்டம் மற்றும் அதிகாரிகள் கடைகளின் பூட்டை உடைத்து மதுவிற்பனையை தொடங்கிய சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு