முதல்-அமைச்சர் விஜய், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள முக்கிய தொழில் நிறுவனங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்.ஸ்ரீபெரும்புதூரை அடுத்த ஒரகடம் சிப்காட் தொழிற் வளர்ச்சி மையத்தில் அமைந்துள்ள 'டெய்ம்லர் இந்தியா வர்த்தக வாகனங்கள்' உற்பத்தி ஆலையை அவர் பார்வையிட்டார். சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் செயல்பட்டு வரும் இந்த தொழிற்சாலை, தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள 'டெய்ம்லர் பஸஸ் இந்தியா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது.இந்த ஆலையில் 'பாரத்பென்ஸ்' மற்றும் 'மெர்சிடிஸ்-பென்ஸ்' பிராண்டுகளில் பேருந்துகள் மற்றும் பஸ் சேஸ்கள் தயாரிக்கப்படுகின்றன.
Advertisement
வணிக வாகன உற்பத்தியில் முக்கிய பங்காற்றும் இந்த நிறுவனத்தின் செயல்பாடுகளை முதல்-அமைச்சர் விஜய் ஆய்வு செய்தார்.இதற்கு முன்பு, ஸ்ரீபெரும்புதூருக்கு அருகிலுள்ள மாம்பாக்கத்தில் செயல்பட்டு வரும், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனமான செயின்ட் கோபின் வளாகத்தையும் அவர் பார்வையிட்டார். தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ள இந்த நிறுவனம், தனது உலகத் தரம் வாய்ந்த கண்ணாடி உற்பத்தி வளாகத்தை விரிவுபடுத்தியுள்ளது.அதனைத் தொடர்ந்து, நிசான் கார் நிறுவனத்தின் தொழிற்சாலையையும் முதல்-அமைச்சர் விஜய் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.