Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 12 செப்டம்பர் 2026 | 27 ஆவணி பராபவ வருடம்

காங்கோவில் தீவிரமடையும் எபோலா பாதிப்பு: உயிரிழப்பு 930 ஆக உயர்வு

காங்கோவில் தீவிரமடையும் எபோலா பாதிப்பு: உயிரிழப்பு 930 ஆக உயர்வு

மத்திய கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள காங்கோ நாட்டில் எபோலா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதால் அந்நாடு கடுமையான சுகாதாரச் சவாலை எதிர்கொண்டு வருகிறது. உலகின் மிகவும் ஆபத்தான வைரஸ் நோய்களில் ஒன்றாகக் கருதப்படும் எபோலா, காங்கோவைத் தவிர உகாண்டா மற்றும் லைபீரியா உள்ளிட்ட பிற ஆப்பிரிக்க நாடுகளிலும் பதிவாகியுள்ளது. எபோலா பரவல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் காங்கோ போன்ற பாதிப்பு அதிகமுள்ள நாடுகளுடனான விமானப் போக்குவரத்துக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளன.இந்த நிலையில், காங்கோவில் இதுவரை 2,344 பேருக்கு எபோலா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Advertisement
மேலும், இந்த வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 930 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 37 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அதிகாரப்பூர்வ தகவலில் கூறப்பட்டுள்ளது. தொற்று தொடர்ந்து வேகமாக பரவி வருவதால், அதன் பரவலை கட்டுப்படுத்துவதில் காங்கோ சுகாதார அதிகாரிகள் கடுமையாகப் போராடி வருகின்றனர்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
PRGI NO : TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு