Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 14 நவம்பர் 2026 | 28 ஐப்பசி பராபவ வருடம்

கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ விவகாரத்தில் அரசு உண்மையை மறைக்கிறதா? - அண்ணாமலை கேள்வி

கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ விவகாரத்தில் அரசு உண்மையை மறைக்கிறதா? - அண்ணாமலை கேள்வி

கள்ளக்குறிச்சி தவெக சட்டமன்ற உறுப்பினர் தொடர்பான விவகாரத்தில் தமிழக அரசு உண்மைகளை மறைக்க முயற்சிக்கிறதா என வி த லீடர்ஸ் அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ தொடர்பான விவகாரத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. மாவட்ட ஆட்சியர் தலைமைச் செயலரிடம் புகார் அளித்தாரா? அந்தப் புகார் முதல்வர் அலுவலகத்துக்குச் சென்றதா? முதல்வர் சம்பந்தப்பட்ட எம்எல்ஏவை நேரில் அழைத்து எச்சரித்தாரா? என ஊடகங்களில் வெளியாகும் தகவல்கள் உண்மையா என்பது குறித்து இன்னும் தெளிவான பதில் கிடைக்கவில்லை. இந்தச் சூழல் மறைந்த பிரபல கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.

Advertisement
லட்சுமணின் புகழ்பெற்ற கார்ட்டூனை நினைவூட்டுகிறது. இதேபோன்ற குற்றச்சாட்டு ஒரு சாதாரண குடிமகன் மீது சுமத்தப்பட்டிருந்தால், புகார் அளிக்கப்பட்டதா, இல்லையா என இவ்வளவு காலம் அரசு பொறுமையாக விவாதித்துக் கொண்டிருக்குமா? ஆளுங்கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மட்டும் சட்டத்திற்கு அப்பாற்பட்ட சலுகைகள் வழங்கப்பட்டுள்ளனவா? சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற நிலைப்பாட்டை தமிழக அரசு கொண்டிருந்தால், அதைச் செயலிலும் முதல்வர் உறுதிப்படுத்த வேண்டும். எனவே, இந்த விவகாரத்தின் உண்மை நிலவரத்தை தமிழக அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என அண்ணாமலை தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,140
🥈 Silver ₹205.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு