Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வியாழன் | 24 செப்டம்பர் 2026 | 8 புரட்டாசி பராபவ வருடம்

கல்வி உதவித்தொகை பெற கல்லூரி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் ரேவதி தகவல்

கல்வி உதவித்தொகை பெற கல்லூரி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் ரேவதி தகவல்

தஞ்சை மாவட்டத்தில் தகுதியுள்ள கல்லூரி மாணவ, மாணவிகள் 2026-27-ம் ஆண்டுக்கான கல்வி உதவித்தொகையைப் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் ரேவதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் படிக்கும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு பிரதம மந்திரி பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை திட்டம் ஆண்டுதோறும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2026-27-ம் கல்வியாண்டிற்கான உதவித்தொகையும் தகுதி மற்றும் நிபந்தனைகளின் அடிப்படையில் வழங்கப்பட உள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 3-ம் ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு எவ்வித நிபந்தனையும் இன்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

Advertisement
அதேபோல், பாலிடெக்னிக், இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளில் பயிலும் மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். கல்வி உதவித்தொகைக்கான விண்ணப்பங்களை https://umis.tn.gov.in என்ற இணையதளம் மூலம் சமர்ப்பிக்கலாம். தகுதியுள்ள மாணவர்கள் தாங்கள் பயிலும் கல்லூரியில் கல்வி உதவித்தொகைக்காக நியமிக்கப்பட்டுள்ள ஒருங்கிணைப்பு அலுவலரை அணுகி, இணையதளம் வாயிலாக அக்டோபர் 21-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். கல்வி உதவித்தொகை தொடர்பான சந்தேகங்களுக்கு தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்படும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை அலுவலக நேரத்தில் அணுகி தேவையான விளக்கங்களைப் பெறலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,000
🥈 Silver ₹250.00
Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு