கர்நாடகாவின் பல்லாரியில் லேசான நிலநடுக்கம்!
கர்நாடக மாநிலம் பல்லாரி பகுதியில் இன்று மதியம் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. மதியம் 1.38 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 2.9 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.பூமிக்கு அடியில் சுமார் 5 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், இது 15.012 டிகிரி வடக்கு அட்சரேகை மற்றும் 76.592 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையில் அமைந்துள்ளதாக முதற்கட்டமாக கணிக்கப்பட்டுள்ளது.இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் அல்லது பாதிப்புகள் தொடர்பாக உடனடி தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. பல்லாரி பகுதியில் திடீரென நில அதிர்வு உணரப்பட்டதால் அப்பகுதி மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.