Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வியாழன் | 17 செப்டம்பர் 2026 | 1 புரட்டாசி பராபவ வருடம்

கும்பாபிஷேக பாதுகாப்பு பணி: போலீசார் தங்குவதற்காக மதுரையில் 24 பள்ளிகளுக்கு 2 நாள் விடுமுறை

கும்பாபிஷேக பாதுகாப்பு பணி: போலீசார் தங்குவதற்காக மதுரையில் 24 பள்ளிகளுக்கு 2 நாள் விடுமுறை

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் இன்று (வியாழக்கிழமை) கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் மதுரைக்கு வருகை தருகின்றனர். விழாவையொட்டி பாதுகாப்பு பணிக்காக சுமார் 6,500 போலீசார் குவிக்கப்பட உள்ளனர். இதற்காக வெளிமாவட்டங்களில் இருந்தும் போலீசார் மதுரைக்கு வந்துள்ளனர். பாதுகாப்பு பணிக்கு வந்த போலீசாரை தனியார் மண்டபங்களில் தங்க வைப்பதற்கான போதிய ஏற்பாடுகள் செய்ய முடியாத நிலையில், மதுரை நகரின் முக்கிய பகுதிகளில் உள்ள பள்ளிகளில் அவர்களை தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன்படி விளக்குத்தூண் அவ்வையார் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, எம்.ஏ.வி.எம்.எம். மேல்நிலைப்பள்ளி, அமெரிக்கன் கல்லூரி மேல்நிலைப்பள்ளி, திலகர்திடல் மீனாட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மங்கையர்க்கரசி மேல்நிலைப்பள்ளி, வீரமாமுனிவர் மேல்நிலைப்பள்ளி, சேதுபதி மேல்நிலைப்பள்ளி, மீனாட்சி பஜார் தொழிலாளர் நலத்துறை மேல்நிலைப்பள்ளி, தெப்பக்குளம் நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சவுராஷ்டிரா ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளிகள் உள்ளிட்ட 24 பள்ளிகள் போலீசாருக்கான தங்குமிடங்களாக பயன்படுத்தப்படுகின்றன.

Advertisement
இதனால், இந்த 24 பள்ளிகளுக்கு மட்டும் 2 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மதுரை மாவட்டம் முழுவதும் இன்று ஏற்கனவே ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. போலீசார் தங்குவதற்கான ஏற்பாடுகளுக்காக மேற்கண்ட பள்ளிகளுக்கு மட்டும் நேற்றும் விடுமுறை வழங்கப்பட்டது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், 24 பள்ளிகளும் அடுத்த மாதம் ஒரு சனிக்கிழமை பள்ளி வேலை நாளாக செயல்பட வேண்டும் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தயாளன் தெரிவித்துள்ளார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு