Skip to main content
🌤️ —°C
புதன் | 29 ஜூலை 2026 | 13 ஆடி பராபவ வருடம்

கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தினால் ஈரானின் மின் நிலையங்களை குறிவைப்போம்: டிரம்ப் எச்சரிக்கை

கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தினால் ஈரானின் மின் நிலையங்களை குறிவைப்போம்: டிரம்ப் எச்சரிக்கை
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான மோதல் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், போர் நடவடிக்கைகள் நேற்று 11-வது நாளை எட்டியுள்ளன. இரு நாடுகளும் தொடர்ந்து தாக்குதல்களில் ஈடுபட்டு வருவதால், ஹார்முஸ் நீரிணை வழியாக நடைபெறும் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.இந்த சூழலில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஈரான் தனது தாக்குதல்களை தொடர்ந்தால் அதற்கு கடுமையான பதிலடி வழங்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.இதுதொடர்பாக அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், இனி ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் எந்தக் கப்பலின் மீதும் ஈரான் ஏவுகணை, ராக்கெட், டிரோன் அல்லது பிற ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியால், அதற்கு பதிலடியாக ஈரானின் பாலம் அல்லது மின் உற்பத்தி நிலையங்களை அமெரிக்கா குண்டுவீசி முழுமையாக அழிக்கும் என தெரிவித்துள்ளார்.மேலும், இந்த நடவடிக்கை தேவையானால் ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் உள்ள முக்கிய உள்கட்டமைப்புகளையும் குறிவைக்கும் என்றும் டிரம்ப் தனது பதிவில் எச்சரித்துள்ளார்.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு