திருவண்ணாமலை மாவட்டம், ஆணாய்பிறந்தான் கிராமத்தில் உள்ள சமுத்திரம் பெரிய ஏரியில் மூழ்கி உயிரிழந்த 5 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆணாய்பிறந்தான் கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் பெண் குழந்தைகள் காப்பகத்தில் செவிலியராகப் பணியாற்றிய தேன்மொழி (22) மற்றும் அங்கு தங்கியிருந்த சிறுமிகளான காரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த விஜயலட்சுமி (16), அல்லி (14), பூமிகா (13), நெடுங்கம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த வள்ளியம்மாள் (16) ஆகிய ஐந்து பேரும் நேற்று (நவம்பர் 9) காப்பகத்தின் பின்புறம் அமைந்துள்ள சமுத்திரம் பெரிய ஏரியில் குளிக்கச் சென்றுள்ளனர்.
Advertisement
அப்போது எதிர்பாராதவிதமாக ஐந்து பேரும் நீரில் மூழ்கி உயிரிழந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த துயரச் செய்தியைக் கேட்டு மிகுந்த மனவேதனை அடைந்ததாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துள்ள அவர், பாதிக்கப்பட்ட ஐந்து குடும்பங்களுக்கும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.3 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.