தமிழ்நாடு அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை முதல்-அமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். இதையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் விஜய்யை சந்திப்பதற்காக வந்திருந்த மூதாட்டி ஒருவர், அவரை அன்புடனும் பெருமிதத்துடனும் வாழ்த்திப் பேசியது கவனம் பெற்றது. அப்போது பேசிய அவர், “என் தங்க மகனே... என் செல்லமே... நீதான் 20 வருஷத்துக்கு இருக்கணும் ராசா.
Advertisement
நீதான் வரணும் என் சிங்கம். மக்களுக்கு ஏற்கனவே சலுகைகள் இருப்பவர்களுக்கு கொடுக்காமல், இல்லாதவர்களுக்கு கொடுங்க. என் ராசா... என் தங்க மகன் ஏழை மக்களுக்காக வந்திருக்க. இந்த ஏழை மக்களை காப்பாற்று. பெண் குழந்தைகளையும் காப்பாற்று” என வாழ்த்தினார். முதல்-அமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து மூதாட்டி அன்புடன் கூறிய இந்த வார்த்தைகள் அங்கிருந்தவர்களின் கவனத்தை ஈர்த்தன.