Skip to main content
🌤️ —°C
வெள்ளி | 14 ஆகஸ்ட் 2026 | 29 ஆடி பராபவ வருடம்

ஊழலற்ற ஆட்சியை முதல்-அமைச்சர் விஜய் வழங்குகிறார்; 2026-27 பொது பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் மரிய வில்சன்

ஊழலற்ற ஆட்சியை முதல்-அமைச்சர் விஜய் வழங்குகிறார்; 2026-27 பொது பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் மரிய வில்சன்
தமிழக சட்டசபையில் 2026-27 நிதியாண்டுக்கான பொது பட்ஜெட் இன்று காலை 10 மணிக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதற்காக முதல்-அமைச்சர் விஜய் சட்டசபைக்கு வருகை தந்தார். அதேபோல், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்களும் அவையில் கலந்து கொண்டனர்.பட்ஜெட் தாக்கலுக்கு முன்பாக, நிதியமைச்சர் மரிய வில்சன் முதல்-அமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். பின்னர் சபாநாயகர் பிரபாகர் அவைக்கு வந்ததும், உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர்.இதையடுத்து, 2026-27 நிதியாண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் மரிய வில்சன் சட்டசபையில் தாக்கல் செய்து உரையாற்றினார்.அப்போது அவர் பேசுகையில், “த.வெ.க.வின் வெற்றி என்பது தமிழக மக்களின் வெற்றியாகும்.
Advertisement
பிறப்பால் அனைவரும் சமம் என்ற கொள்கையை அடிப்படையாகக் கொண்டு முதல்-அமைச்சர் விஜய் ஆட்சி நடத்தி வருகிறார். தமிழ்நாட்டில் ஊழலற்ற நிர்வாகத்தை அவர் வழங்கி வருகிறார்.மாநில அரசின் நிதிச்சுமை இரட்டிப்பு அளவுக்கு உயர்ந்துள்ளது. பல்வேறு திட்டங்களை செயல்படுத்த தேவையான நிதி ஆதாரங்கள் குறைவாக உள்ளன. இந்த நிதி நெருக்கடியிலிருந்து தமிழ்நாட்டை மீட்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.மேலும், ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் வருகிற செப்டம்பர் 15-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. அந்தத் திட்டத்திற்காக ரூ.560 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு