Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வெள்ளி | 25 செப்டம்பர் 2026 | 9 புரட்டாசி பராபவ வருடம்

ஈரோடு: மது போதையில் அரசு பேருந்தின் முன்பக்க கண்ணாடியை உடைத்த இளைஞர் கைது

ஈரோடு: மது போதையில் அரசு பேருந்தின் முன்பக்க கண்ணாடியை உடைத்த இளைஞர் கைது

ஈரோடு மாவட்டம் கோபியை அடுத்த தான்தோன்றியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த கார்த்திகேயன் என்ற இளைஞர், மதுபோதையில் பெருந்துறையில் இருந்து கோபிசெட்டிபாளையம் நோக்கிச் சென்ற அரசு நகரப் பேருந்தில் பயணம் செய்துள்ளார். மொடச்சூர் பேருந்து நிறுத்தம் அருகே பேருந்தை முறையாக நிறுத்தவில்லை எனக் கூறி, ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் கார்த்திகேயன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும், பேருந்தை நிறுத்தாமல் சென்றால் கண்ணாடியை உடைத்துவிடுவதாகவும் அவர் மிரட்டியுள்ளார்.

Advertisement
பின்னர் பேருந்து மொடச்சூர் வந்தபோது கீழே இறங்கிய கார்த்திகேயன், ஆத்திரத்தில் பேருந்தின் முன்பக்க கண்ணாடியை அடித்து உடைத்துள்ளார். இதில் கண்ணாடி முழுவதுமாக நொறுங்கியதால், பேருந்தில் இருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். இதுதொடர்பாக பேருந்து ஓட்டுநர் அளித்த புகாரின் அடிப்படையில், கோபி போலீசார் கார்த்திகேயனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,010
🥈 Silver ₹250.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு