Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 14 நவம்பர் 2026 | 28 ஐப்பசி பராபவ வருடம்

இந்தியாவின் முயற்சியால் உலகம் முழுவதும் பிரபலமடைந்த யோகா - பிரதமர் மோடி

இந்தியாவின் முயற்சியால் உலகம் முழுவதும் பிரபலமடைந்த யோகா - பிரதமர் மோடி

கர்நாடக மாநிலத்தில் ரூ.15,600 கோடி மதிப்பிலான வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்புத் திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று பெங்களூரு சென்றுள்ளார். அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், யோகாவின் சிறப்புகள் மற்றும் உலகளாவிய வளர்ச்சி குறித்து பேசினார். அப்போது பிரதமர் மோடி கூறியதாவது: இந்தியாவின் கலாசாரத்தையும் பாரம்பரியத்தையும் புரிந்துகொள்ள யோகா ஒரு முக்கியமான வழியாக உள்ளது. இந்தியா மேற்கொண்ட தொடர் முயற்சிகளின் காரணமாகவே யோகா இன்று உலக நாடுகள் அனைத்திலும் பிரபலமடைந்துள்ளது. இதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், சர்வதேச யோகா தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

Advertisement
நான் வெளிநாடுகளுக்குச் செல்லும் ஒவ்வொரு முறையும், அங்குள்ள மக்கள் மதிய மற்றும் இரவு உணவின்போது என்னுடன் யோகா குறித்து ஆர்வத்துடன் உரையாடுகின்றனர். பெங்களூருவில் யோகாவின் மகத்தான ஆற்றலை அனுபவிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது. யோகா துறையுடன் தொடர்புடைய பல ஆசிரியர்களும் அறிஞர்களும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். மறைந்த புகழ்பெற்ற கன்னட நடிகர் டாக்டர் ராஜ்குமாரும் யோகா பயிற்சியில் ஈடுபட்டு வந்தவர் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,140
🥈 Silver ₹205.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு