Skip to main content
தினத்துளிர்
🌤️ —°C
வெள்ளி | 11 செப்டம்பர் 2026 | 26 ஆவணி பராபவ வருடம்

இங்கிலாந்து புறப்பட்டார் முதல்-அமைச்சர் விஜய்

இங்கிலாந்து புறப்பட்டார் முதல்-அமைச்சர் விஜய்

தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் அரசு முறைப் பயணமாக இங்கிலாந்து செல்லும் முதல்-அமைச்சர் விஜய், சென்னை விமான நிலையத்தில் இருந்து லண்டன் புறப்பட்டார். லண்டன் செல்ல சென்னை விமான நிலையத்திற்கு வந்த முதல்-அமைச்சர் விஜய்க்கு அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர். அவர்களை நோக்கி கையசைத்தும், கைகூப்பியும் விஜய் தனது வாழ்த்துகளை தெரிவித்தார். மேலும், அங்கு கூடியிருந்தவர்களை நோக்கி ‘ஹார்ட்’ சைகையையும் காட்டினார். செப்டம்பர் 12-ம் தேதி லண்டனில் நடைபெறும் சில்வர்ஸ்டோன் கார் பந்தய போட்டியை முதல்-அமைச்சர் விஜய் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். அப்போது கார் பந்தயக் களத்தில் நடிகர் அஜித்தையும் அவர் சந்திக்க உள்ளார். முதல்-அமைச்சர் விஜயின் இங்கிலாந்து பயணம் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தவெக அரசு பொறுப்பேற்ற 100 நாட்களுக்குள் முதலீட்டாளர் மாநாடு மூலம் ரூ.1 லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் ரூ.8,491 கோடி மதிப்பிலான முதலீட்டு திட்டங்களை முன்வைத்துள்ளன. இதன் மூலம் 5,690 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்தைச் சேர்ந்த பல நிறுவனங்கள் நீண்ட காலமாக தமிழகத்தில் உற்பத்தி ஆலைகள் மற்றும் உலகளாவிய திறன் மையங்களை அமைத்து செயல்பட்டு வருகின்றன.

Advertisement
இந்த உறவுகளை மேலும் வலுப்படுத்துவதுடன், தமிழகத்தில் ஏற்கனவே செயல்பட்டு வரும் நிறுவனங்களின் நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதும் முதல்-அமைச்சரின் இங்கிலாந்து பயணத்தின் முக்கிய நோக்கமாகும். குறிப்பாக மேம்பட்ட உற்பத்தி, வாகனங்கள், மின்சார வாகனங்கள் மற்றும் மின்னணு சாதனங்கள் உள்ளிட்ட துறைகளில் புதிய முதலீடுகளை ஈர்ப்பதன் மூலம் தமிழகத்தில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளது. அதேபோல், தமிழகத்தில் முன்னெடுக்கப்படும் மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகர திட்டத்தை மேம்படுத்தும் வகையில், உலகின் முன்னணி மோட்டார் ஸ்போர்ட்ஸ் உள்கட்டமைப்பு வசதிகளை நேரில் பார்வையிட்டு, அவற்றின் சிறந்த நடைமுறைகளை அறிந்து கொள்வதும் இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாகும். இதன் அடிப்படையில், சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட்டை முதல்-அமைச்சர் விஜய் பார்வையிட திட்டமிடப்பட்டுள்ளது. அங்கு சுற்றுப்பாதை வடிவமைப்பு, பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் மோட்டார் ஸ்போர்ட்ஸ் வளாகங்களை சிறப்பாகவும், வணிக ரீதியாகவும் நிர்வகிப்பதற்கான நடைமுறைகள் குறித்து அவர் அறிந்து கொள்ள உள்ளார். மேலும், மோட்டார் ஸ்போர்ட்ஸ் உள்கட்டமைப்பு, விளையாட்டு சுற்றுலா மற்றும் அதனுடன் தொடர்புடைய சிறப்பு வாகனத் தொழில்களில் உள்ள வாய்ப்புகள் குறித்தும் இந்தப் பயணத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியும் என தமிழக அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு