Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
திங்கள் | 21 செப்டம்பர் 2026 | 5 புரட்டாசி பராபவ வருடம்

ஆட்டோ ஓட்டி... சுடச்சுட டீ போட்டுக் கொடுத்து வாக்கு சேகரித்த தவெக வேட்பாளர்!

ஆட்டோ ஓட்டி... சுடச்சுட டீ போட்டுக் கொடுத்து வாக்கு சேகரித்த தவெக வேட்பாளர்!

மதுராந்தகம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் போட்டியிடும் மரகதம் குமரவேல், தொடர்ந்து 6-வது நாளாக பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அத்திரப்பாக்கம் தெற்கு ஒன்றியத்துக்குட்பட்ட திருமேற்கண்டிகை, கடமலைப்புத்தூர், தொழுப்பேடு, ஆத்தூர், வில்லியம்பாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளில் திறந்த வாகனத்தில் சென்று பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். கடமலைப்புத்தூர் பகுதியில் பிரசாரத்துக்கு சென்றபோது, பொதுமக்கள் மரகதம் குமரவேலுக்கு ரோஜா மலர்களை தூவி, ஆட்டம், பாட்டத்துடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Advertisement
இதையடுத்து அங்கிருந்த ஆட்டோ நிறுத்தத்துக்குச் சென்ற அவர், ஆட்டோவை தானே ஓட்டி பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். தொடர்ந்து அருகிலிருந்த டீக்கடைக்குச் சென்ற மரகதம் குமரவேல், அங்கு சுடச்சுட டீ தயாரித்து பொதுமக்களுக்கு வழங்கியதுடன், அவர்களுடன் கலந்துரையாடினார். இதனால் கடமலைப்புத்தூர் பகுதியில் தவெக வேட்பாளரின் வாக்கு சேகரிப்பு பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,270
🥈 Silver ₹260.00
Petrol ₹107.77
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு