Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
செவ்வாய் | 29 செப்டம்பர் 2026 | 13 புரட்டாசி பராபவ வருடம்

அரசு பேருந்து நடத்துனர் வெட்டிக் கொலை... மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

அரசு பேருந்து நடத்துனர் வெட்டிக் கொலை... மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

மயிலாடுதுறை அருகே அரசு பேருந்து நடத்துனர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் போலீசார், தப்பியோடிய மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டம் ஆனந்ததாண்டவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். இவரது மனைவி மாலதி. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். தமிழ்ச்செல்வன் அரசு பேருந்தில் நடத்துனராக பணியாற்றி வந்தார். தினமும் அதிகாலை 4.30 மணிக்கு பணிக்குச் சென்று, இரவு 10 மணியளவில் வீடு திரும்புவது வழக்கம். இந்நிலையில், நேற்று வழக்கம்போல் பணிக்குச் சென்ற தமிழ்ச்செல்வன் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் கவலையடைந்தனர். இதற்கிடையே, நள்ளிரவில் ஆற்காடு ரெயில்வே கேட் பகுதியில் சாலையோரமாக ஒருவர் வெட்டுக்காயங்களுடன் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்ததை பொதுமக்கள் பார்த்துள்ளனர். இதுகுறித்து மயிலாடுதுறை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

Advertisement
அங்கு கொலை செய்யப்பட்டிருந்த நபர் அணிந்திருந்த சீருடை மற்றும் அடையாள அட்டையை வைத்து அவர் அரசு பேருந்து நடத்துனர் தமிழ்ச்செல்வன் என்பது தெரியவந்தது. இதையடுத்து தமிழ்ச்செல்வனின் உடல் பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். தமிழ்ச்செல்வன் கொலை செய்யப்பட்டதற்கு முன்பகை காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்ட எஸ்.பி. சினேக பிரியா தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, கொலையாளிகளை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,640
🥈 Silver ₹240.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு