அமெரிக்க அதிபர் டிரம்பை இன்று சந்திக்கிறார் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உடன் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இன்று சந்திப்புஉக்ரைன்–ரஷியா இடையிலான போர் இன்று 1,612வது நாளை எட்டியுள்ளது. இந்த மோதலில் இதுவரை ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர்.போரின் தொடக்கம் முதலே உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் ஆயுதங்கள் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்றன. போரை நிறுத்துவதற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்காததால், மோதல் தொடர்ந்து நீடித்து வருகிறது.இந்த சூழலில், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி இன்று அமெரிக்கா சென்றுள்ளார்.
அவர் வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.இந்த சந்திப்பில் ரஷியாவுடன் நடைபெற்று வரும் போர் நிலவரம் குறித்து இரு நாட்டு தலைவர்களும் ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அமெரிக்காவிடமிருந்து கூடுதல் ஆயுதங்களை பெறுவது தொடர்பான விவகாரமும் பேச்சுவார்த்தையில் இடம்பெறலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.