Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வியாழன் | 01 அக்டோபர் 2026 | 15 புரட்டாசி பராபவ வருடம்

அன்பில் மகேஷ் மீது ரூ.100 கோடி ஊழல் புகார்: அமலாக்கத்துறை விசாரணை தொடக்கம்

அன்பில் மகேஷ் மீது ரூ.100 கோடி ஊழல் புகார்: அமலாக்கத்துறை விசாரணை தொடக்கம்

தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடி மோசடி செய்ததாக எழுந்த புகார் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் தி.மு.க. பிரமுகர் அரசகுமார் மற்றும் அவரது உறவினர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கும் தொடர்பு இருப்பதாக போலீசார் குற்றம்சாட்டியுள்ளனர். இதையடுத்து அவருடன் தொடர்புடைய வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. மேலும், மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவரை நேரில் அழைத்து விசாரணை நடத்தினர். இதே வழக்கில் தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. முத்துக்குமாரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement
இந்நிலையில், அன்பில் மகேஷ் தொடர்பான ரூ.100 கோடி ஊழல் புகார் குறித்து அமலாக்கத்துறையும் விசாரணையைத் தொடங்கியுள்ளது. மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்த எப்.ஐ.ஆர். அடிப்படையில் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த வழக்கில் சட்டவிரோதமாக நடைபெற்றதாக கூறப்படும் பணப் பரிவர்த்தனைகள் குறித்தும் அமலாக்கத்துறை ஆய்வு செய்து வருகிறது. மேலும், அன்பில் மகேஷ் மற்றும் அரசகுமார் ஆகியோருடன் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தவும் அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. வழக்கின் விசாரணைக்கு தேவையான ஆவணங்களை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் இருந்து அமலாக்கத்துறை பெற்றுள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,640
🥈 Silver ₹240.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு