அன்பில் மகேஷ் மீது ரூ.100 கோடி ஊழல் புகார்: அமலாக்கத்துறை விசாரணை தொடக்கம்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
01 Oct 2026, வியாழன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 01 Oct 2026, Thursday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

அன்பில் மகேஷ் மீது ரூ.100 கோடி ஊழல் புகார்: அமலாக்கத்துறை விசாரணை தொடக்கம்

அன்பில் மகேஷ் மீது ரூ.100 கோடி ஊழல் புகார்: அமலாக்கத்துறை விசாரணை தொடக்கம்

தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடி மோசடி செய்ததாக எழுந்த புகார் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் தி.மு.க. பிரமுகர் அரசகுமார் மற்றும் அவரது உறவினர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கும் தொடர்பு இருப்பதாக போலீசார் குற்றம்சாட்டியுள்ளனர். இதையடுத்து அவருடன் தொடர்புடைய வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. மேலும், மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவரை நேரில் அழைத்து விசாரணை நடத்தினர். இதே வழக்கில் தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. முத்துக்குமாரையும் போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில், அன்பில் மகேஷ் தொடர்பான ரூ.100 கோடி ஊழல் புகார் குறித்து அமலாக்கத்துறையும் விசாரணையைத் தொடங்கியுள்ளது. மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்த எப்.ஐ.ஆர். அடிப்படையில் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த வழக்கில் சட்டவிரோதமாக நடைபெற்றதாக கூறப்படும் பணப் பரிவர்த்தனைகள் குறித்தும் அமலாக்கத்துறை ஆய்வு செய்து வருகிறது. மேலும், அன்பில் மகேஷ் மற்றும் அரசகுமார் ஆகியோருடன் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தவும் அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. வழக்கின் விசாரணைக்கு தேவையான ஆவணங்களை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் இருந்து அமலாக்கத்துறை பெற்றுள்ளது.