Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 14 நவம்பர் 2026 | 28 ஐப்பசி பராபவ வருடம்

9-ம் வகுப்பு மாணவருக்கு ரூ.1.62 கோடி மதிப்புள்ள பி.எம்.டபிள்யூ கார் பரிசு - இன்ப அதிர்ச்சி கொடுத்த தந்தை

9-ம் வகுப்பு மாணவருக்கு ரூ.1.62 கோடி மதிப்புள்ள பி.எம்.டபிள்யூ கார் பரிசு - இன்ப அதிர்ச்சி கொடுத்த தந்தை

மேற்கு வங்கத்தில், 9-ம் வகுப்பு அரையாண்டுத் தேர்வில் சிறப்பான மதிப்பெண்கள் பெற்ற தனது 15 வயது மகனுக்கு, தொழிலதிபர் ஒருவர் ரூ.1.62 கோடி மதிப்புள்ள பி.எம்.டபிள்யூ சொகுசு காரைப் பரிசாக வழங்கியுள்ளார். இந்தச் சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. மேற்கு வங்க மாநிலம், புர்பா பர்தமான் மாவட்டம், கல்சி பகுதியை அடுத்த பராஜ் கிராமத்தைச் சேர்ந்தவர் ஷம்சுதீன் மித்யா. தொழிலதிபரான இவரது மகன் முகமது தல்ஹா (15), அங்குள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். தனது மகன் அரையாண்டுத் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்றால், அவருக்கு சொகுசு கார் வாங்கித் தருவதாக ஷம்சுதீன் ஏற்கெனவே வாக்குறுதி அளித்திருந்தார். அதன்படி, தேர்வில் மகன் எதிர்பார்த்தபடி சிறப்பான மதிப்பெண்களைப் பெற்றதால், தனது வாக்குறுதியை நிறைவேற்றத் தந்தை முன்வந்தார். மும்பை அந்தேரியில் உள்ள பி.எம்.டபிள்யூ ஷோரூமில் இருந்து ரூ.1.62 கோடி மதிப்பிலான 'பி.எம்.டபிள்யூ எம்4 காம்படிஷன்' (BMW M4 Competition) காரை வாங்கினார்.

Advertisement
பின்னர், சிறப்பு கண்டெய்னர் வாகனம் மூலம் மும்பையில் இருந்து கொண்டுவரப்பட்ட புதிய கார், கடந்த 6-ம் தேதி பராஜ் கிராமத்தைச் சென்றடைந்தது. அங்கு கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில், காரின் சாவி மாணவர் முகமது தல்ஹாவிடம் வழங்கப்பட்டது. இந்நிலையில், இன்னும் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான வயதைக்கூட எட்டாத 15 வயது சிறுவனுக்கு இவ்வளவு விலையுயர்ந்த, அதிவேகமாகச் செல்லக்கூடிய காரைப் பரிசளித்திருப்பது இணையத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மகனின் கல்வி முயற்சியை ஊக்குவிக்கும் வகையில் தந்தை அளித்த பரிசுக்கு ஒரு தரப்பினர் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். அதேவேளையில், சிறுவனின் வயதைக் கருத்தில் கொண்டு சாலைப் பாதுகாப்பு தொடர்பான கவலைகளையும் பலர் முன்வைத்து வருகின்றனர்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,140
🥈 Silver ₹205.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு