கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘டாக்சிக்’ திரைப்படம், வெளியான 9 நாட்களில் உலகளவில் ரூ.322 கோடி வசூலை ஈட்டியுள்ளது.கீது மோகந்தாஸ் இயக்கத்தில் உருவான இப்படம் கடந்த 26-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. கேவிஎன் புரொடக்சன்ஸ் தயாரித்துள்ள ‘டாக்சிக்’ திரைப்படம் கேங்ஸ்டர் டிராமா கதைக்களத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.இப்படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மணி வசந்த், ஹுமா குரேஷி, தாரா சுத்ரியா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.சுமார் ரூ.500 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ள இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.
Advertisement
இருப்பினும், வசூலில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வருகிறது.கடந்த 26-ம் தேதி வெளியான ‘டாக்சிக்’, 9 நாட்களில் உலக அளவில் ரூ.322 கோடி வசூல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியாவில் மட்டும் ரூ.280 கோடி வசூலாகியுள்ளது.திரையரங்க வசூல் தற்போது ரூ.322 கோடியாக உள்ள நிலையில், இப்படத்தின் சாட்டிலைட் மற்றும் ஓடிடி உரிமைகள் ரூ.235 கோடிக்கு விற்பனையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.