தமிழ்நாட்டில் ஒரே நேரத்தில் 112 இரண்டாம் நிலை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு முதல்வர்கள் நியமிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை என உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் கடந்த 60 ஆண்டுகளில் இதுபோன்ற வகையில் 112 அரசு கல்லூரி முதல்வர்கள் ஒரே நேரத்தில் நியமிக்கப்பட்டதில்லை என்று கூறினார். கடந்த 10 ஆண்டுகளில் 10 முதல் 25 கல்லூரி முதல்வர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். 112 கல்லூரி முதல்வர்களை ஒரே நேரத்தில் நியமித்திருப்பது தமிழக வரலாற்றில் முதன்முறையாகும் என்றும், எந்தவித பணமும் பெறாமல் இந்த நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் விஸ்வநாதன் கூறினார்.
Advertisement
மேலும், பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனம் தொடர்பான வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் இருப்பதால், அது குறித்து தற்போது விரிவாக பேச முடியாது என அவர் தெரிவித்தார். துணைவேந்தர்கள் இல்லாத பல்கலைக்கழகங்களில், கன்வீனர் கமிட்டி மூலமாக 11 பல்கலைக்கழகங்களுக்கு பொறுப்பு துணைவேந்தர்கள் நியமிக்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் விஸ்வநாதன் கூறினார்.