Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
செவ்வாய் | 29 செப்டம்பர் 2026 | 13 புரட்டாசி பராபவ வருடம்

42 ஆண்டுகால தேசிய சாதனை முறியடிப்பு... வித்யா ராம்ராஜுக்கு நயினார் நாகேந்திரன் வாழ்த்து

42 ஆண்டுகால தேசிய சாதனை முறியடிப்பு... வித்யா ராம்ராஜுக்கு நயினார் நாகேந்திரன் வாழ்த்து

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மகளிருக்கான 400 மீட்டர் தடைத் தாண்டும் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜுக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், 54.75 வினாடிகளில் பந்தயத்தை நிறைவு செய்து வெண்கலப் பதக்கம் வென்ற வித்யா ராம்ராஜ், 42 ஆண்டுகளாக நீடித்து வந்த தேசிய சாதனையையும் முறியடித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். பெண்களின் தன்னம்பிக்கை மற்றும் திறமைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக அவர் விளங்குவதாகவும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். 1984-ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் முன்னாள் இந்திய தடகள வீராங்கனை பி.டி. உஷா 55.42 வினாடிகளில் பதிவு செய்திருந்த தேசிய சாதனையை வித்யா ராம்ராஜ் முறியடித்துள்ளார்.

Advertisement
அவரது இந்த வெற்றி தமிழகத்துக்கும் இந்தியாவுக்கும் பெருமை சேர்த்துள்ளதாக நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார். மேலும், தன்னம்பிக்கை மற்றும் கடின உழைப்புடன் இலக்கை நோக்கி பயணிக்கும் இளம் தலைமுறையினருக்கு வித்யா ராம்ராஜின் சாதனை ஊக்கமளிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தன்னம்பிக்கை, விடாமுயற்சி மற்றும் சாதிக்க வேண்டும் என்ற உறுதியின் அடையாளமாகத் திகழும் வித்யா ராம்ராஜுக்கு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ள நயினார் நாகேந்திரன், அவர் தொடர்ந்து பல்வேறு உயரங்களை எட்டி, இளம் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்கமாக இருந்து, சர்வதேச அரங்கில் இந்தியாவுக்கு மேலும் பல பெருமைகளை பெற்றுத் தர வேண்டும் என வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,765
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு