திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே விவசாயி ஒருவரின் தோட்டத்தில் 3 கிலோ எடை கொண்ட பிரம்மாண்ட காளான் முளைத்துள்ளது. இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் வியப்புடன் வந்து பார்வையிட்டுச் சென்றனர். பழைய ஆயக்குடியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவர் தனது தோட்டத்தில் கொய்யா சாகுபடி செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று கொய்யாப்பழங்களைப் பறிப்பதற்காக தோட்டத்திற்குச் சென்ற அவர், அங்கு வழக்கத்திற்கு மாறாக மிகப்பெரிய அளவில் காளான் ஒன்று வளர்ந்திருப்பதைக் கண்டார்.
Advertisement
இதையடுத்து, அந்தக் காளானைப் பறித்து எடை பார்த்தபோது, அது 3 கிலோ இருந்தது தெரியவந்தது. பொதுவாக காளான்கள் சுமார் கால் கிலோ எடை கொண்டதாக இருக்கும் நிலையில், 3 கிலோ எடையுடன் காணப்பட்ட இந்த ராட்சத காளான் அப்பகுதி மக்களின் கவனத்தை ஈர்த்தது. இதனைப் பலரும் ஆர்வத்துடனும் ஆச்சரியத்துடனும் வந்து பார்த்துச் சென்றனர்.