2029-ல் தவெக தலைவர் விஜய்தான் பிரதமர் வேட்பாளர்: எம்.எல்.ஏ. கனிமொழி பேட்டி
2029-ம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜய்தான் பிரதமர் வேட்பாளராக இருப்பார் என அக்கட்சியின் எம்.எல்.ஏ. கனிமொழி தெரிவித்துள்ளார்.தமிழக சட்டமன்றத்திற்கு இன்று வந்த அவர், செய்தியாளர்களிடம் பேசுகையில், 2029-ம் ஆண்டில் பிரதமர் யார் என்பது முக்கியமான கேள்வியாக இருக்கும் என்றார். ஆனால், இந்த முறை பிரதமர் வேட்பாளர் குறித்த முடிவு டெல்லியில் இருந்து எடுக்கப்படாது என்றும், தமிழ்நாட்டில் இருந்தே அந்த முடிவு எடுக்கப்படும் என்றும் கூறினார்.மேலும், 2029-ம் ஆண்டில் இந்திய அரசியலமைப்பில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் எனவும் கனிமொழி தெரிவித்தார்.தவெக தலைவர் விஜய்யை தமிழக முதல்-அமைச்சராக அமர வைப்பதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முக்கிய பங்கு வகிப்பார் என்றும், பின்னர் 2029-ல் விஜய்யை பிரதமர் பதவியில் அமர வைப்பதற்கும் அவரே ஆதரவளிப்பார் என்றும் கனிமொழி கூறினார்.2025-ல் தாங்கள் கணித்தது 2026-ல் நடந்ததாகவும், அதேபோல் 2029-ம் ஆண்டிலும் தங்களது கணிப்பு நிறைவேறும் என்றும் அவர் தெரிவித்தார்.