பாலிவுட் நடிகர் கார்த்திக் ஆர்யன், தென்னிந்திய நடிகை ஸ்ரீலீலா இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் வெளியீடு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அனுராக் பாசு இயக்கத்தில் உருவாகும் இப்படம், 2027-ம் ஆண்டு ஏப்ரல் 30-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. இன்னும் பெயர் சூட்டப்படாத இந்தப் படம், காதல் மற்றும் இசையை மையமாகக் கொண்டு உருவாகி வருகிறது. பூஷண் குமார் தயாரிக்கும் இப்படத்துக்கு பிரீதம் இசையமைக்கிறார். கார்த்திக் ஆர்யனும் ஸ்ரீலீலாவும் முதன்முறையாக இந்தப் படத்தின் மூலம் திரையில் இணைகின்றனர். முதலில் 2025-ம் ஆண்டு வெளியிடத் திட்டமிடப்பட்டிருந்த இப்படம், பின்னர் 2026-ம் ஆண்டுக்கு மாற்றப்பட்டது.
Advertisement
தற்போது மீண்டும் வெளியீட்டுத் தேதி மாற்றப்பட்டு, 2027-ம் ஆண்டு ஏப்ரல் 30-ந்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. முன்னதாக, இப்படம் ‘ஆஷிகி 3’ என்ற பெயரில் உருவாக உள்ளதாகத் தகவல்கள் பரவின. ஆனால், அந்தத் தலைப்பு இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. இந்தத் திரைப்படத்தின் மூலம் ஸ்ரீலீலா இந்தி திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். அனுராக் பாசு இயக்கத்தில் கார்த்திக் ஆர்யன் மற்றும் ஸ்ரீலீலா முதன்முறையாக இணைந்துள்ளதால், இப்படத்தின் வெளியீட்டை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.