Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
திங்கள் | 21 செப்டம்பர் 2026 | 5 புரட்டாசி பராபவ வருடம்

2 பதக்கங்கள் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு முதல்-அமைச்சர் விஜய் வாழ்த்து

2 பதக்கங்கள் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு முதல்-அமைச்சர் விஜய் வாழ்த்து

ஒலிம்பிக் போட்டிகளுக்கு அடுத்தபடியாக முக்கியத்துவம் வாய்ந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகின்றன. அந்த வகையில், 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானின் அய்ச்சி மாகாணத்தில் உள்ள நகோயா நகரில் நேற்று முன்தினம் தொடங்கின. இதில் 45 நாடுகளைச் சேர்ந்த சுமார் 11 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 496 பேர் களமிறங்கியுள்ளனர். இந்நிலையில், நேற்று நடைபெற்ற மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் தனிநபர் போட்டியில் இந்திய வீராங்கனை இளவேனில் வாலறிவன் சிறப்பாக செயல்பட்டு வெள்ளிப் பதக்கம் வென்றார். விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் 2-வது இடத்தை பிடித்து அவர் பதக்கத்தை தட்டிச் சென்றார். இதற்கு முன்பாக நடைபெற்ற 10 மீட்டர் ஏர் ரைபிள் அணிப் போட்டியிலும் இளவேனில் வாலறிவன், சோனம் மாஸ்கர், விதார்ஷா வினோத் ஆகியோர் இடம்பெற்ற இந்திய அணி வெள்ளிப் பதக்கம் வென்றது. இதன் மூலம் ஒரே நாளில் இளவேனில் வாலறிவன் 2 வெள்ளிப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.

Advertisement
இந்த நிலையில், துப்பாக்கி சுடுதல் வீராங்கனை இளவேனில் வாலறிவனுக்கு முதல்-அமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள் அணிப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய மகளிர் அணியில் இடம்பெற்றதுடன், தனிநபர் பிரிவிலும் வெள்ளிப் பதக்கம் கைப்பற்றிய இளவேனில் வாலறிவனுக்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார். இந்திய வீராங்கனைகளின் இந்த சாதனை பாராட்டுக்குரியது என்றும், இளம் தலைமுறையினர் தங்களுக்கான இலக்கை நிர்ணயித்து விடாமுயற்சியுடன் செயல்பட்டு வெற்றி பெறுவதற்கான நம்பிக்கையையும் ஊக்கத்தையும் இது ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ள விளையாட்டு வீராங்கனைகளின் வெற்றிப் பயணம் தொடர்ந்து பல புதிய வரலாறுகளை உருவாக்க வேண்டும் என்றும் முதல்-அமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,270
🥈 Silver ₹260.00
Petrol ₹107.77
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு