Skip to main content
🌤️ —°C
வியாழன் | 27 ஆகஸ்ட் 2026 | 11 ஆவணி பராபவ வருடம்

18-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு டெல்லியில் செப்டம்பர் 12, 13-ல் நடைபெறும்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

18-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு டெல்லியில் செப்டம்பர் 12, 13-ல் நடைபெறும்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
இந்த ஆண்டுக்கான 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் புதுடெல்லியில் நடைபெறவுள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.2026-ஆம் ஆண்டுக்கான பிரிக்ஸ் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ள நிலையில், “வலிமை, புதுமை, ஒத்துழைப்பு மற்றும் நிலைத்தன்மைக்கான கட்டமைப்பு” என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு பணிகளை முன்னெடுத்து வருகிறது. மாநாட்டில் பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக தலைவர்கள் ஆலோசனை நடத்த உள்ளனர். மேலும், பொதுவான முன்னுரிமைகள், உலகளாவிய மற்றும் பிராந்திய முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் குறித்தும் அவர்கள் கருத்துகளைப் பரிமாறிக்கொள்ள உள்ளனர்.அரசியல் மற்றும் பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் நிதி, கலாசாரம் மற்றும் மக்கள் தொடர்பு ஆகிய மூன்று முக்கியத் தூண்களை மையமாகக் கொண்டு பிரிக்ஸ் நாடுகளின் ஒத்துழைப்பு தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது.பயங்கரவாதத்தை எதிர்கொள்வது, பருவநிலை மாற்றம், உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு, சர்வதேச பொருளாதாரம் மற்றும் நிதி நிலவரம், வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச விவகாரங்களிலும் பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு விரிவுபடுத்தப்பட்டு வருகிறது.இந்தியா இதற்கு முன்பு 2012, 2016 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் பிரிக்ஸ் தலைமைப் பொறுப்பை வகித்துள்ளது. இந்நிலையில், 2026-ஆம் ஆண்டில் நான்காவது முறையாக அந்தப் பொறுப்பை ஏற்றுள்ளது.
Advertisement
மேலும், பிரிக்ஸ் அமைப்பு தொடங்கப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவடையும் ஆண்டாகவும் 2026 அமைந்துள்ளது.பிரிக்ஸ் அமைப்பில் பிரேசில், சீனா, எகிப்து, எத்தியோப்பியா, இந்தியா, இந்தோனேசியா, ஈரான், ரஷியா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 11 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. பெலாரஸ், பொலிவியா, கியூபா, கஜகஸ்தான், மலேசியா, நைஜீரியா, தாய்லாந்து, உகாண்டா மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகியவை இணைப்பு நாடுகளாக உள்ளன.புதுடெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெறவுள்ள இந்த உச்சி மாநாட்டில், பிரிக்ஸ் உறுப்பு நாடுகள், கூட்டாளர் நாடுகள் மற்றும் அழைப்பு விடுக்கப்பட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.இதனிடையே, சீன அதிபர் ஜி ஜின்பிங் சுமார் 400 பேர் கொண்ட குழுவுடன் டெல்லி மாநாட்டில் பங்கேற்க உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன. ஆனால், அவரது பயணம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.ரஷிய அதிபர் புதின் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், ரஷிய தரப்பில் இருந்து இதுதொடர்பான இறுதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.வங்காளதேச பிரதமர் தாரிக் ரஹ்மானுக்கும் இந்தியா மாநாட்டில் பங்கேற்க விருந்தினர் அழைப்பு விடுத்துள்ளது. ஆனால், அவர் மாநாட்டில் பங்கேற்பாரா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு