Skip to main content
🌤️ —°C
வியாழன் | 27 ஆகஸ்ட் 2026 | 11 ஆவணி பராபவ வருடம்

ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி உயிருடன் உள்ளாரா? அமெரிக்க அதிபர் டிரம்ப் பதில்

ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி உயிருடன் உள்ளாரா? அமெரிக்க அதிபர் டிரம்ப் பதில்
அமெரிக்கா கடந்த பிப்ரவரி மாதம் ஈரான் மீது நடத்திய தாக்குதலில், அந்நாட்டின் உச்ச தலைவர் அயேதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இதையடுத்து ஈரானின் புதிய உச்ச தலைவராக மொஜ்தபா கமேனி நியமிக்கப்பட்டார்.அவர் பதவியேற்று சுமார் 6 மாதங்கள் கடந்துள்ள நிலையிலும், இதுவரை பொதுவெளியில் தோன்றவில்லை. இதனால் மொஜ்தபா கமேனி தற்போது எங்கு இருக்கிறார், அவரது உடல்நிலை எப்படி உள்ளது என்பது குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.இந்நிலையில், மொஜ்தபா கமேனி உயிரிழந்திருக்க வாய்ப்பில்லை என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து பேட்டியளித்த டிரம்ப், மொஜ்தபா கமேனி இறந்துவிட்டார் என தான் கருதவில்லை என்றும், அவர் மிகவும் மோசமாக காயமடைந்திருக்கலாம் என்றும் கூறினார். குறிப்பாக, அவரது உடலின் இடது பக்கம், முழங்கை மற்றும் கால் ஆகிய பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டிருக்கலாம் என அவர் தெரிவித்தார்.மேலும், மொஜ்தபா கமேனி உயிருடன் இல்லாவிட்டால், ஈரான் மிகப்பெரிய நாடகத்தை அரங்கேற்றி வருவதாக அர்த்தம் என்றும் டிரம்ப் குறிப்பிட்டார்.கடந்த பிப்ரவரி 28-ம் தேதி அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் மொஜ்தபா கமேனி படுகாயமடைந்ததாகவும், அதன்பிறகு அவர் பொதுவெளியில் தோன்றவில்லை என்றும் பல்வேறுதகவல்கள்வெளியாகியுள்ளன.அமெரிக்கா-ஈரான் இடையேயான மோதல் 6 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது.
Advertisement
போரை விரைவில் முடிவுக்கு கொண்டு வருவோம் என டிரம்ப் தொடர்ந்து கூறி வரும் நிலையில், ஈரான் மீது கடுமையான பொருளாதார நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார்.தற்போது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார அழுத்தங்கள் பலன் அளித்து வருவதாக கூறிய டிரம்ப், விரைவில் அமெரிக்கா மிகப்பெரிய வெற்றியை பெறும் என்றும் தெரிவித்தார். மேலும், ஹார்முஸ் ஜலசந்தி முழுமையாக திறந்திருப்பதாகவும் அவர் கூறினார்.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு