Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 07 நவம்பர் 2026 | 21 ஐப்பசி பராபவ வருடம்

15 வயதில் கேப்டன் பொறுப்பு... பீகார் அணியை வழிநடத்தும் வைபவ் சூர்யவன்ஷி

15 வயதில் கேப்டன் பொறுப்பு... பீகார் அணியை வழிநடத்தும் வைபவ் சூர்யவன்ஷி

2026-27ஆம் ஆண்டுக்கான சையது முஷ்டாக் அலி கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில், முதல் இரண்டு ஆட்டங்களில் பீகார் அணியின் கேப்டனாக இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி செயல்பட உள்ளார். இந்தியாவின் உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடரான சையது முஷ்டாக் அலி கோப்பை போட்டிகள் நவம்பர் 14ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 6ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. இதற்காக 17 வீரர்களைக் கொண்ட பீகார் அணியை மாநில கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. இதில் 15 வயதான வைபவ் சூர்யவன்ஷிக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. சூரஜ் காஷ்யப் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். பீகார் அணி தனது முதல் ஆட்டத்தில் நவம்பர் 14ஆம் தேதி இந்தூரில் சவுராஷ்டிரா அணியை எதிர்கொள்கிறது. தொடர்ந்து நவம்பர் 16ஆம் தேதி நடைபெறும் இரண்டாவது போட்டியில் ரயில்வேஸ் அணியுடன் மோதுகிறது.

Advertisement
இந்த இரண்டு ஆட்டங்களுக்கு மட்டுமே வைபவ் சூர்யவன்ஷி கேப்டனாகப் பொறுப்பேற்கிறார். இதையடுத்து, நவம்பர் 19 முதல் 29ஆம் தேதி வரை கத்தாரில் நடைபெறவுள்ள ரைசிங் ஸ்டார்ஸ் ஆசியக் கோப்பை தொடரில் இந்தியா 'ஏ' அணிக்காக அவர் விளையாட உள்ளார். இதனால் பீகார் அணியிலிருந்து விலகி இந்தியா 'ஏ' அணியுடன் இணையவிருக்கிறார். ஏற்கெனவே ஐபிஎல் மற்றும் சர்வதேச கிரிக்கெட்டில் தனது திறமையால் கவனம் பெற்றுள்ள வைபவ் சூர்யவன்ஷிக்கு, தற்போது தனது மாநிலத்தின் சீனியர் அணியை வழிநடத்தும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. இளம் வயதிலேயே கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது அவரது கிரிக்கெட் பயணத்தில் மற்றொரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,140
🥈 Silver ₹205.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு