13-ந்தேதி வங்கக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி: தமிழகத்தில் பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
வங்கக்கடலில் வரும் 13-ந்தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி வரும் 13-ந்தேதி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும். தொடர்ந்து வடமேற்கு திசையில் நகரும் இந்த அமைப்பு, அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற வாய்ப்புள்ளது. மேலும், மன்னார் வளைகுடா மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 1.5 கிலோமீட்டர் உயரத்திலும், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் சுமார் 0.9 கிலோமீட்டர் உயரத்திலும் வளிமண்டல சுழற்சிகள் நிலவி வருகின்றன. இன்றைய மழை நிலவரம் (10-11-2026) ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தின் கடலோரப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். அப்போது மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றும் வீச வாய்ப்புள்ளது. நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யலாம். மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் புதுச்சேரியிலும் சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. நாளை மழை முன்னறிவிப்பு (11-11-2026) சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் பலத்த காற்று வீசும் நிலையில் கனமழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் சில இடங்களில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மற்ற தமிழகப் பகுதிகளிலும் புதுச்சேரியிலும் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யலாம். 12-11-2026 தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். இதனுடன் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தின் இதர பகுதிகளிலும் புதுச்சேரியிலும் சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும். 13-11-2026 கோயம்புத்தூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களின் மலைப்பகுதிகள் மற்றும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யலாம். மற்ற தமிழகப் பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும். 14-11-2026 திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.