10 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட தமிழக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் தென்மேற்கு வங்கக்கடலில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. மேலும், இந்த சுழற்சியில் இருந்து வடமேற்கு வங்கக்கடல் பகுதி வரை காற்றழுத்தத் தாழ்வுப் பாதையும் காணப்படுகிறது. இந்த வானிலை அமைப்புகளின் தாக்கத்தால் தமிழகத்தின் சில பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.