10 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
20 Oct 2026, செவ்வாய் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 20 Oct 2026, Tuesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

10 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு

10 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட தமிழக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் தென்மேற்கு வங்கக்கடலில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. மேலும், இந்த சுழற்சியில் இருந்து வடமேற்கு வங்கக்கடல் பகுதி வரை காற்றழுத்தத் தாழ்வுப் பாதையும் காணப்படுகிறது. இந்த வானிலை அமைப்புகளின் தாக்கத்தால் தமிழகத்தின் சில பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், இன்று காலை வெளியிடப்பட்ட தகவலின்படி, 10 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.